பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது வெளியே "தமிழ்நாடு” சர்ச்சை.. முதல்முறையாக விளக்கம் கொடுத்த விக்ரமன்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது வெளியே தமிழ்நாடு சர்ச்சை நடந்து கொண்டிருக்கும்போது உள்ளே அதைப் பற்றி பேசிய தகவலை விக்ரமன் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் விக்ரமன் கலந்து கொண்டிருக்கிறார்.
விக்கிரமனிடம் மதுரை முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் இருக்கும் போது, வெளியே தமிழ்நாடு பெயர் பற்றி பிரச்சனை நடந்து கொண்டிருந்தது அதேபோல நீங்கள் உள்ளே பேசினீர்களே எப்படி என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

சிறப்பு விருந்தினர்கள்
விஜய் டிவியில் தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் நடுவர்களாக குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ருதிகா, மதுரை முத்து, ரேஷ்மா பசுபுலெட்டி, தாடி பாலாஜி போன்றோர் இருந்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து விக்ரமன், ஷிவின், அமுதவாணன் மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் விக்ரமனிடம் மதுரை முத்து கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார்.

வியப்பாக இருந்தது
அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் குறிப்பாக பொங்கல் நேரத்தில் டிடி உள்ளே வந்திருந்த நேரத்தில் ஏற்கனவே வெளியேயும் தமிழ்நாடு குறித்து பிரச்சனை போய்க்கொண்டிருந்தது அதை பற்றி நீங்கள் உள்ளே பேசி இருந்தீர்கள் பின்பு வெளியே வந்த பிறகு அது தெரிந்து உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு விக்ரமன் வெளியே நடந்தது எனக்கு அப்போது தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. வெளியே வந்த பிறகு எனக்கு அது வியப்பாக இருந்தது.

போராடி பெற்ற பெயர்
பொங்கல் தினத்தில் நாம் மறந்து விடும் ஒரு விஷயம் என்றால் தமிழ்நாடு என்ற பெயர் நமது மாநிலத்திற்கு வந்த நாள் அதுதான். பெரிய போராட்டத்திற்கு பின்னர் அது நமக்கு கிடைத்தது.விருதுநகரை சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் என்பவர் 18 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததை அடுத்து பாராளுமன்றம் வரை போராடி பெற்றதுதான் தமிழ்நாடு என்ற பெயர். அந்த தினத்தை நாம் அனைவரும் மீண்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை சொன்னேன். ஆனால் அதே நேரத்தில் வெளியேவும் அது குறித்த நிகழ்வு நடந்தது. நான் வெளியே வந்து பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஒருவேளை இருக்குமோ
தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரமோ ரசிகர்களின் பலருடைய கேள்வியை பூர்த்தி செய்யும் விதமாக இருப்பதாகவும், விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வரும் நிலையில், மதுரை முத்து ரசிகர்கள் கேட்ட நினைத்த கேள்வியை சரியான நேரத்தில் கேட்டு அனைவருக்கும் தெளிவான பதிலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் விக்கிரமன் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து விஜய் டிவியில் அவரை அழைத்து வருவதற்கு காரணம் இதுதான் சமாதானப்படுத்துதலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications