Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்தநாள் விழாவில் ஜோடியாக கலக்கும் ஷபானா, ஆரியன்...அடடா என்ன ஒரு ஜோடி பொருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : இதுவரைக்கும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஷபானாவும், ஆரியனும் ரசிகர்களின் கண்களில் வசமாக சிக்கி விட்டார்கள்.
எத்தனை நாளைக்குத்தான் இதையெல்லாம் மறைச்சு வைக்க முடியும் என்று ரசிகர்கள் வம்பு இழுத்து வருகிறார்கள்.

அதுவும் ஜோடியாக அருகருகே இவர்களைப் பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.

சீக்கிரமாக கல்யாண செய்தியை சொல்லுங்க. ..ஆனா அதுக்கு முன்னாடி உங்க வாயால காதலிக்கும் விஷயத்தை வெளிப்படையாக சொன்னால் நல்லா இருக்கும் என்று அன்பு கொஞ்சல்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

மாட்டிக்கிச்சி... ஜோடி மாட்டிகிச்சி..

மாட்டிக்கிச்சி... ஜோடி மாட்டிகிச்சி..

சீரியலில் ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும் ஒரே பீல்டில் இருக்கும் இவர்களுக்குள் காதல் எப்படி பற்றிக்கொண்டது என்று தெரியாமல் திணறும் ரசிகர்கள் ஷபானாவும் ஆரியனும் தனித்தனியே காதல் விஷயங்களை சொல்லுமாறு கேட்டு வருகிறார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே தாங்கள் காதலிப்பதற்கு க்லூ கொடுத்திருந்தாலும் தற்போது கைகளில் மோதிரத்தை காட்டி ரகசியமாக எங்கேஜ்மெனட் முடிந்துவிட்டது என்பதை ரகசியமாக ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்கள். இவர்களின் சஸ்பென்ஸ் நயன்தாராவின் சஸ்பென்ஸ் போல அல்லவா இருக்கிறது. நயன்தாராவாவது டிவி இன்டர்வியூல் ரசிகர்களிடம் தன்னுடைய மோதிரத்தின் ரகசியத்தை உடைத்துவிட்டார்,ஆனால் இவர்கள் இன்னும் வாய் திறக்காததால் ஷபானாவின் ரசிகர்கள் கொஞ்சம் மனக் கவலையில் தான் இருக்கிறார்கள்.

இருவருக்குள்ளும் என்ன இருக்கு

இருவருக்குள்ளும் என்ன இருக்கு

செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவும், பாக்கியலட்சுமி சீரியலில் எழியனாக நடிக்கும் ஆரியனும் காதலித்து வருகிறார்கள் என்ற செய்தியை இன்ஸ்டாகிராம் மூலமாக இருவரும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக பட்டென்று சொல்லவில்லை என்றாலும் புதிர் போடுவது போலவே இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாற்றி மாற்றி போஸ்ட் போட்டு ரசிகர்களை குழப்ப வைத்து விட்டார்கள்.ஆரியனிடம் ஒரு பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்க அதற்கு செம்பருத்தி ஷபானா விடம் தான் பதில் கேட்க வேண்டும் என்று அவரை டேக் செய்து முதல் முதலாக இவர்களுக்குள் என்ன இருக்கிறது என்று ரசிகர்களை குழம்ப விட்டுவிட்டார். அதற்கு பிறகு இருவருமே மாற்றி மாற்றி தங்களுக்குள் இருக்கும் காதலை இலைமறைகாயாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இருக்கா? இல்லையா?

இருக்கா? இல்லையா?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவர்கள் இருவருக்குமே ரகசியமாக எங்கேஜிமெண்ட் முடித்துவிட்டதை ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரின் கைகளில் இருக்கும் மோதிரத்தை போட்டோ எடுத்து போஸ்ட் போட்டிருந்தார். போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கண்டு பிடித்துவிட்டனர். இது ஷபானாவில் கை தானே என்று!!ஆனாலும் அதற்கு சிரிப்பை மட்டுமே பதித்திருந்த ஆரியன் தெளிவாக பதிலை கூறவில்லை. இருந்தாலும் விடாத ரசிகர்கள் ஷபானாவின் இன்ஸ்டாகிராமில் ஐடியில் என்ன போட்டிருக்கிறார் என்று ஆர்வமாக போய் பார்த்தனர்.ஆனால் அங்கே ஷபானா எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு போட்டோவில் கையை தூக்கி மலர்களை கொஞ்சியபடி இருப்பதில் ரசிகர்கள் அவரின் கைகளில் இருக்கும் மோதிரத்தை கவனித்து விட்டார்கள், அப்போது அந்தக்கை ஷபானா உடையது தான் என்று அடித்துக் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

அருகருகே அடைக்கலம்

அருகருகே அடைக்கலம்

அதுமட்டுமல்லாமல் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆரியன் ஒரு போட்டோவை போஸ்ட் போட்டிருந்தார். அதில் உங்களுடைய கல்யாணம் எப்போது? சீக்கிரமாக நல்ல செய்தியைச் சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு விரைவில் என்று பதில் கூறியிருந்தார். ஆனால் அது ஷபானா தானா என்று சிறு குழப்பம் இருந்தது. தற்போது அந்த குழப்பம் தேவையில்லை என்று நிரூபிக்கும் விதமாக இந்த ஜோடி ரசிகர்களின் கண்களில் மாட்டிவிட்டது. இவர்கள் இருவரும் ஒரு பிறந்த நாள் விழாவில் ஜோடியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டோம் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர். செம்பருத்தி ஷபானாவும், பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ரேஷ்மாவும் நெருங்கிய தோழிகள் அதில் ரேஷ்மாவுக்கு தற்போது மதன் என்பவருடன் காதல், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று இவர்களே வெளிப்படையாக கூறி விட்டனர். இந்த நிலையில் மதனின் பிறந்தநாளுக்கு ஷபானா ஆரியன் உடன் சென்றிருக்கிறார் .

எப்போ தான் சொல்லுவீங்க

எப்போ தான் சொல்லுவீங்க

மதனின் பிறந்தநாளுக்கு ஜீ தமிழ் சீரியலில் இருந்து பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். செம்பருத்தி சீரியலில் நடிக்கும் வீஜே கதிர், யாரடி நீ மோகினி சீரியல் நடிக்கும் நட்சத்திரா ஸ்ரீநிதி மற்றும் பலர் கலந்து இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களின் கண்களில் அவர்களை எல்லாம் பார்ப்பதை விடவும் ஷபானாவையும் ஆரியனினையும் தான் நன்றாக பார்த்து இருக்கிறது. இந்த போட்டோஸ்கள் ரேஷ்மாவின் ரசிகர்களின் பேன்ஸ் பேஜ்க்களில் வலம் வருகிறது. ஆனால் இதை பார்த்தபிறகு ஷபனாவின் ரசிகர்கள் இந்த போட்டோவிற்கு அதிகமாக கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலின் மூலமாக ஆரியனுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இந்த சீரியலில் மாஸ் ஹீரோவாக இவர் கேரக்டர் இருப்பதால் இவருக்கும் வாழ்த்துக்கள் குவிகிறது. எப்படியோ இருவரும் சீக்கிரத்தில் டும்...டும் ..விசயத்தை வெளியே சொன்னால் சரிதான் என்று ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+