கடவுளா பார்த்து எனக்கு ஒன்பது நாள் கொடுத்தாரு! வீடியோ காலில் நான் கண்ட காட்சி இருக்கே.. நெகிழ்ந்த விஷால்
சென்னை: நடிகர் விஷால் நடிகை தன்ஷிகாவே காதலிக்கும் விஷயத்தை நேற்று முன் தினம் அறிவித்து இருந்தார். இந்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடவுள் தனக்கு கொடுத்த ஒன்பது நாள் குறித்து நெகிழ்ச்சியாக விஷால் பேசி இருக்கிறார். தன்னுடைய கம் பேக் குறித்து மன மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்.
நடிகை சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா பட விழாவில் விஷால் தன்ஷிகாவே காதலிக்கும் விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதற்கு முன்பே இந்த செய்தி இணையத்தில் வெளியாகிவிட்டது. அதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் விஷால் மற்றும் தன்ஷிகா இவருடைய அன்பு புரிதல் மற்றும் பக்குவமான பேச்சு பலருடைய மனதையும் கவர்ந்திருந்தது.

விஷால் திருமணம்
தன்னுடைய காதலை அறிவித்த பிறகு விஷால் தன் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் மத கஜா ராஜா படத்தை எடுத்து முடித்ததும் பல்வேறு பிரச்சனைகள் வந்தது என்று கூறியிருக்கிறார். என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை. எப்படியாவது படம் வெளியாக வேண்டும் என்று காத்திருந்தோம். ஆனால் நாங்கள் கேள்விப்படாத பிரச்சனை எல்லாம் வந்தது. இந்த படம் வெளியாவதற்கு சிபிஐ பிரச்சனை இருப்பதாகவும் சொல்லப்பட்டது. என்ன படத்திற்கு சிபிஐ பிரச்சனை வருதா என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆமாப்பா அதெல்லாம் சொல்ல முடியல என்று சொல்லிவிட்டார்கள்.
கடவுள் கொடுத்த நாள்
சரி எப்படி போகட்டும் என்று இருக்கும் போது தான் கடவுள் எனக்கு ஒரு ஒன்பது நாள் கொடுத்தார். என்னுடைய வாழ்க்கையில் அந்த ஒன்பது நாள் கடவுள் எனக்கு விடுமுறை கொடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அந்த படம் வெளியாவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து, படமும் வெளியே வந்துவிட்டது. அப்போது தியேட்டரில் இருந்து எனக்கு ஒரு மேனேஜர் ஃபோன் செய்திருந்தார். அது ஒரு பெரிய தியேட்டர் தான்.
மகிழ்ச்சியில் விஷால்
அந்த மேனேஜர் ஃபோன் செய்து சார் வீடியோக்களில் வரீங்களா என்று கேட்டார். என்ன பிரச்சனையா என்று கேட்டேன். சார் வாங்க என்று சொன்னார். படம் 12 வருடம் கழித்து வெளியானாலும் ஏதோ புது படம் போல எல்லோரும் கொண்டாடினார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க பாடுன பாட்ட கேட்டு மக்கள் தியேட்டரில் செம ஆட்டம் போடுறாங்க, பல வருஷத்துக்கு முன்னாடி பேப்பர் பறக்க விட்டது போல இப்போ இந்த பாட்டுக்கு பேப்பரை பறக்க விடுறாங்கன்னு சொன்னாரு.
விஷால் பேட்டி
அதை வீடியோ காலில் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடைய பாட்ட கேட்டு எல்லாரும் ஆட்டம் போட்டதை பார்த்தது, கலிகாலம் என்னுடைய பாட்டுக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் என்று தான் தோன்றியது. இதை நம்பி விஜய் ஆண்டனி அவருடைய நிகழ்ச்சியில் என்னை பாட வைத்தார். அதுதான் இதைவிட கொடுமை. ஆனாலும் மக்கள் மத கஜ ராஜா படத்திற்கு பல வருஷம் கழித்து வெளியானதும் அவ்வளவு அன்பும் ஆதரவும் கொடுத்தாங்க என்று நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
விஷாலுக்கு கம்பேக்
நடிகர் விஷால் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த மத கஜ ராஜா திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 12 வருடங்களுக்கு முன்பு மிகவும் எபெக்ட் போட்டு நடித்த திரைப்படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் மீண்டும் கம் பேக் கொடுக்கும் போது விஷாலுக்கு இருக்கும் ரசிகர்களின் அருமை அவருக்கு புரிந்து இருக்கும். இந்த படத்தின் பிரமோஷனுக்காக விஷால் வந்த போது அவருடைய நிலைமை பார்த்து ரசிகர்கள் பதறிப் போயிருந்தனர்.
ரசிகர்களின் அன்பு
விஷாலுக்கு என்ன ஆச்சு என்பதுதான் அனைவருடைய கேள்வியாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு சிலர் விஷால் உடைய நிலைமை இனி அவ்வளவுதான், அவருக்கு அந்த நோய் இருக்கிறது... இந்த நோய் இருக்கிறது என்றெல்லாம் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் ஒரு வாரத்திலேயே விஷால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டார். 47 வயதான விஷால் மதகஜராஜா திரைப்படத்தின் பிரமோசனின் போது கைகள் நடுங்க கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்ததை பார்த்ததும் அனைவரும் அவர் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிகாட்டி இருந்தனர். அதை எப்போது நினைத்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என்று விஷால் பல இடங்களில் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications