ஓடிடிக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. சூர்யா படத்தை எப்போது பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை ஓடிடியில் எப்போது பார்க்கலாம்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்த படத்தை எப்போது பார்க்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் சூர்யாவின் வழக்கமான ஆக்சன் படமாக இல்லாமல் குடும்ப உறவுகள், காதல், செண்டிமெண்ட் என வேறு ஒரு களத்தில் உருவாகியிருந்தது. கடைசியாக வெளியான கருப்பு படம் சூர்யாவிற்கு நல்ல ஒரு கம்பேக் கொடுத்து விட்டது. அதை தொடர்ந்து இந்த படமும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது.

Viswanath and Sons Viswanath and Sons OTT Viswanath and Sons OTT Release Viswanath and Sons Netflix Viswanath and Sons Netflix Release Suriya Suriya Latest Movie Suriya Netflix Suriya OTT Release Suriya Mamitha Baiju Mamitha Baiju Venky Atluri Lucky Baskhar Director Viswanath and Sons Release Date Viswanath and Sons Streaming Netflix Tamil Movies Tamil OTT Release Tamil Cinema News Tamil Movie OTT Suriya Movie Update Suriya 2026 Movies Radhika Sarathkumar Nassar Kali Venkat Raveena Tamil Viral News 2026

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி

தற்போதைய தகவலின் படி செப்டம்பர் 11ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற கேரக்டரில் நடித்து இருக்கிறார் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர் சர்வதேச அளவில் துப்பாக்கி சூடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரராகவும் இருக்கிறார்.

படத்தின் கதை

வாழ்க்கையில் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சஞ்சய்க்கு குடும்பத்தில் இருந்து திருமணம் செய்து வாரிசை உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் வருகிறது. இதற்கிடையே அவர் தன்னுடைய அம்மாவை திருப்தி படுத்துவதற்காக வாடகைதாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்கிறார். இதை வைத்து தான் அடுத்த கட்ட பிரச்சனையும், கதையும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நடிகர்கள்

மமீதா பைஜூ இவரை காதலிக்கிறேன் என்று இவர் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்க, இவரோ அந்த கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடைசியில் எதிர்பாராத திருப்பமும் நடந்து விடுகிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஷு நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீணா, நாசர், காளி வெங்கட், ஹர்ஷா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

அடுத்து அடுத்து வெற்றி

லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். சூர்யாவுக்கு கருப்பு படம் 300 கோடி வசூல் கொடுத்திருந்த நிலையில் இந்த படமும் 270 கோடி வசூலை தாண்டி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சூர்யாவிற்கு அடுத்தது இரண்டு வெற்றி படங்கள் கிடைத்திருக்கிறது. இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த படமும் ஓடிடியில் வெளியாக போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+