Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டம், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் விவேக் மகள் திருமணம்.. கலந்து கொண்ட முக்கிய பிரபலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகராக பிரபலமான நடிகர் விவேக் கடந்த வருடத்தில் உடல்நிலை குறைபாட்டால் மரணம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு பிறகு அவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். அது யார் என்று பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் சில நடிகர் நடிகைகளின் வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜயகுமார் வீட்டில் அவருடைய பேத்திக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஒரு வாரமாக அவர்கள் வீட்டில் பங்க்ஷன் களைக்கட்டி இருந்தது. அதை தொடர்ந்து ரோபோ சங்கரின் மகளின் திருமணமும் பெரிய அளவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

Vivek s daughter was the celebrity who attended the wedding

அதுபோல சின்னத்திரையிலும் ஒரு சில நடிகர்கள் திடீரென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் விவேக் மகளின் திருமணம் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. சமீபத்தில் திருமணம் கொண்டாடும் திரை பிரபலங்கள் ஒரு வாரம் ஃபங்ஷனோடு மெஹந்தி, ஹெல்தி என்று பல்வேறு வித விதமான பங்க்ஷன்களை வைத்து புகைப்படங்களை குவித்து வருகிறார்கள்.

ஆனால் நடிகர் விவேக் வீட்டில் அவரைப் போலவே எளிமையாக திருமணத்தை கொண்டாடி இருக்கிறார்கள். விவேக் மறைந்தாலும் அவர் கொள்கைகளை அவருடைய குடும்பத்தினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகர் விவேக்கிற்கு பிரசன்னா குமார், அமிர்த நந்தினி, தேஜஸ்வினி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். அதில் பிரசன்னா கடந்த 2015 ஆம் ஆண்டு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போய்விட்டார்.

இந்த நிலையில் தற்போது விவேக் உடைய இரண்டாவது மகள் தேஜஸ்வினிக்கு தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தேஜஸ்வினி, பரத் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகர் விஜயகாந்தின் மகனான நடிகர்
சண்முக பாண்டியன் தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தின் சார்பாக கலந்து கொண்டிருந்தாராம்.

அதுபோல ரோபோ சங்கரின் குடும்பத்தினரும் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருந்தார்களாம். ஆனால் நடிகர் விவேக்கின் நிழல் போல இருந்த செல் முருகன் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அது குறித்த புகைப்படங்களும் காணப்படவில்லை. ஒருவேளை வேற எதுவும் வேலை இருந்ததால் செல்முருகன் இந்த ஃபங்ஷனில் கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில் எளிமையாக திருமணம் செய்திருந்த தேஜஸ்வினி மற்றும் பரத் தம்பதியினரின் திருமணம் சென்னை சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களுடைய வீட்டில் தான் நடைபெற்று இருக்கிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு இருவருமே மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை நட்டு வைத்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த செயலை இணையத்தில் அதிகமானோர் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் தமிழ் மரபை மறந்து வடமொழி பங்க்ஷன்களை சில பிரபலங்கள் பாலோ பண்ணி வரும் நிலையில் விவேக் குடும்பத்தினர் எளிமையாக திருமணத்தை முடித்து இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் விவேக்கின் இரண்டாவது மகள் தேஜஸ்வினி தான் மறைந்த விவேக்கின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+