“அந்த” நடிகர் போட்டோவுக்கு வெளிப்படையாக அர்ச்சனா போட்ட கமெண்ட்.. என்ன இப்படி சொல்லிட்டாங்க?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜே அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அருண் பிரசாத் புகைப்படத்திற்கு வெளியிட்ட கமெண்ட் தான் இப்போது இணையத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே அர்ச்சனா முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகி இருந்தார். அதுவும் முதல் சீரியலிலே வில்லியாக அறிமுகம் ஆகிவிட்டார். ஹீரோயின் மெட்டீரியல் ஆன அர்ச்சனா வில்லியாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை அவ்வபோது அர்ச்சனாவின் போட்டோ சூட் புகைப்படங்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் வில்லியாக இருந்தாலும் இவர் செய்யும் காமெடி ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று சீரியலில் பாதியிலேயே அர்ச்சனா வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு சில ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் கழித்து அர்ச்சனா உள்ளே வந்தார்.
முதல் நாளே இவரிடம் உள்ளிருந்த போட்டியாளர்கள் சண்டை போட்டு அவரை அழ வைத்திருந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதிரடியாக தன்னை அழ வைத்தவர்களை வார்த்தைகளால் விளையாடி பாடாய் படுத்து எடுத்துவிட்டார். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது. கடைசியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் வழக்கம் போல அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனது குறித்து சர்ச்சைகளும் எழுந்தது. அது ஒரு பக்கம் இருந்தாலும் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் அருண் பிரசாத்துடன் காதல் இருப்பதாக கிசுகிசுப்பு எழுந்து வந்தது. இருவரும் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் பொருளாக மாறி இருந்தனர்.
இந்த நிலையில் இப்போது அருண் பிரசாத் வெளியிட்டிருக்கும் போஸ்டில் என்னுடைய ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த கமெண்ட் பார்த்து ரசிகர்கள் உங்கள் காதலை ஓபன் ஆகவே சொல்லிட்டா நல்லா இருக்குமே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே அர்ச்சனா ஒரு ஷார்ட் பிலிமில் நடித்து வருவதாகவும் அதில் அவருக்கு ஜோடியாக அருண் பிரசாத் நடிப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவி வந்தது.

ஒருவேளை இவர்களுடைய ஷார்ட் பிலிம் பெரிய அளவில் பேச வைப்பதற்காக அர்ச்சனா இப்படி ஒரு கமெண்ட் போட்டாரா? என்று இன்னொரு பக்கம் கேள்விகள் குவிந்து வருகிறது. எது எப்படியோ வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும்போது மீண்டும் மீண்டும் அர்ச்சனா புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர்களுக்குள் காதல் உண்மையா இல்லையா என்று விரைவில் அறிவித்தால் ரசிகர்கள் தெளிவாகுவார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications