பிக் பாஸ் அர்ச்சனா எடுத்த முக்கிய முடிவு.. கைகோர்த்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.. விஷயம் இதுதானா?
சென்னை: விஜே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகரோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த அர்ச்சனா ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் முதல் சீரியலிலயே இவர் வில்லியாக நடித்ததை இவருடைய ரசிகர்களே விரும்பவில்லை. தன்னுடைய கேரக்டரை சரியாக செய்தாலும் இவருக்கு நெகட்டிவ் அதிகமாக வர அந்த சீரியலில் இருந்து அர்ச்சனா விலகிவிட்டார்.

அர்ச்சனா சீரியலில் இருந்து விலகியதும் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு இருந்த அர்ச்சனாவிற்ருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நேரத்தில் பிக் பாஸ் வாய்ப்பு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு வாரத்திற்கு பிறகு கலந்து கொண்ட அர்ச்சனா அனைவரையும் வியந்து பார்க்கும் அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் அழுது கொண்டு இருந்த அர்ச்சனா ஒரு சில நாட்களிலேயே தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை லெப்ட் கேண்டில் கையாண்டு யார்ரா இந்த பொண்ணு என்று சொல்ல வைத்து விட்டார். அதே நேரத்தில் வழக்கம் போல இவருக்கு நெகட்டிவ் கமெண்ட் வந்து கொண்டு தான் இருந்தது. எப்படியோ நிகழ்ச்சியின் கடைசிவரை இருந்த அர்ச்சனா நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் இவருக்கு ஆதரவு வந்தாலும் மறுபக்கத்தில் இவருக்கு டைட்டில் கொடுத்ததை சிலர் விமர்சித்தும் வந்தனர். இப்படியான நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகத்தில் பாரதியாக நடித்து வந்த நடிகர் அருண் பிரசாத்தும் அர்ச்சனாவும் காதலித்து வருகிறார்கள் என்ற செய்தி அப்போதே அதிகமாக கிசு கிசுக்கப்பட்டது.
ஆனால் அதுக்குறித்து எந்த இடத்திலும் அர்ச்சனா பேசவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கேமரா முன்பு அர்ச்சனா பேசிக் கொண்டிருந்ததை பார்த்து நிக்சன் உன்னுடைய காதலனிடம் நீ பேசிக்கிட்டு இருக்கியா? என்று பிரச்சனை செய்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா அருண் பிரசாத் போட்ட ஒரு போஸ்ட்க்கு என்னுடைய ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி என்று கமெண்ட் கொடுத்து இருந்த நிலையில் இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவி வந்தது.

அது குறித்து ஆமாம் இல்லை என்று எந்த கருத்துக்களையும் தெரிவிக்காத அர்ச்சனா இப்போது அருணுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் இவர்கள் இருவரும் குத்து விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள். பிறகு போட்டோ சூட்டும் எடுத்து இருக்கிறார்கள். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் புது படம் எதிலும் கமிட் ஆகி இருக்கிறார்களா? அல்லது ஏதேனும் கடை திறப்பு விழாவிற்கு டெஸ்ட் ஆக போயிருக்கிறார்களா என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மட்டும்தான் வெளியாகி இருக்கிறது தவிர, அது என்ன பங்க்ஷன் என்பது இன்னும் தெளிவாகவில்லை. மறுபக்கத்தில் அர்ச்சனா அருணை திருமணம் செய்யப் போகிறாரா? இவர்கள் இருவரும் காதலிப்பதை வெளியே சொல்வதற்காக தான் இப்படி ஜோடியாக வெளியே போகிறார்களா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து அர்ச்சனா அல்லது அருண் பிரசாத் என்ன தகவல் சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications