Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி பண்ணிட்டியேக்கா.. கதறி அழும் சித்து ரசிகர்கள்.. !

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த விஜே சித்து திடீரென்று ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சித்து என்னும் பெயரைச் கேள்விப்பட்டதுமே அவரது படப்பட பேச்சும் சிரித்த முகமும் தான் அனைவரின் மனதிலும் ஞாபகத்திற்கு வரு.ம் ஆனால் அவர் இந்த மாதிரி பண்ணி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நம்பமுடியாமல் தான் பல ரசிகர்களும் தவித்து வருகின்றனர்..

சித்து என்று சொன்னதுமே அனைவருக்கும் ஞாபகத்திற்கு டக்கென்று வந்து விடும் அளவிற்கு பிரபலமான இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரிலும் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

கதறும் ரசிகர்கள்

கதறும் ரசிகர்கள்

சின்னத் திரை நடிகைகளில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. யாருக்குமே இல்லாத அளவுக்கு தீவிரமாக பாசம் காட்டி வந்தனர் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களிடமும் நன்றாகவே தொடர்பில் இருந்தார். அதனால் இவருடைய ரசிகர்களுக்கு இவர் எப்போதும் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

திருமணத்தை எதிர்பார்த்து

திருமணத்தை எதிர்பார்த்து

இவருக்கு திருமணம் எப்போது என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எங்கேஜ்மெண்ட் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதற்குப் பிறகு அவரது வருங்கால கணவருடன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தெரியப்படுத்தி வந்துகொண்டிருந்தார்.

திடீர் துயரம்

திடீர் துயரம்

பல ரசிகர்களும் வாழ்த்தி விரைவில் இவருக்கு திருமணமாக இருக்கும் நிலையில் இந்த துயரமான சம்பவம் நடந்திருக்கிறது. இவர் நேற்று இரவு தனியார் விடுதி ஒன்றில் சூட்டிங் முடித்தபிறகு தங்கியிருக்கிறார் .அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்னும் செய்தி வெளியாகி இருக்கிறது .இதனை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திலும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

நம்ப முடியாத ரசிகர்கள்

நம்ப முடியாத ரசிகர்கள்

அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் அவர் கூட இருந்த அவரது வருங்கால கணவர் இடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர் இறப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கூட அவரது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் இறந்துவிட்டார் என்னும் செய்தியை நம்ப மறுக்கிறார்கள்.

கடைசி போட்டோ

கடைசி போட்டோ

இவர் அடிக்கடி மாடலிங் போட்டோ ஷூட் நடத்துவது போல தான் தற்போதும் ஒரு பிரைடல் மேக்கப் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் . அந்த போட்டோஸ்கள் கூட கடைசியாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் போஸ்ட் பண்ணி இருக்கிறார் .இவர் போஸ்ட் பண்ண கொஞ்ச நேரத்திலேயே அவருடைய ரசிகர்கள் அவருக்காக கமெண்ட் மழை பொழிந்து இருக்கிறார்கள் .அதுவும் அவருடைய அழகை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள் .

ஏன்க்கா இப்படி

ஏன்க்கா இப்படி

இப்படி சந்தோஷமாக போட்டோ போட்டு விட்டு எப்படி செத்துப் போக உங்களுக்கு மனசு வந்துச்சு என்று அவர்கள் கதறி அழுகின்றனர். இப்படியாக்கா பண்ணுவீங்க என்றும் ரசிகர்கள் பலர் கதறிக் கொண்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டு பிறந்த சித்து மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களின்நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ஆவார். ரசிகர்களின் மனதில் ஒரு பெரிய போல்டான கேரக்டர் ஆக தான் இவர் வலம் வந்து கொண்டிருந்தார்.

அனைவரும் அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சி

தன்னுடைய பேச்சால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த இவர். தற்போது இந்த மாதிரி ஒரு செயலை செய்திருப்பதுதான் யாராலும் எதிர்பார்க்க முடியாததாகப் போய் விட்டது. இந்த 2020 பிறந்ததிலிருந்தே பல கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி அனைத்து மக்களும் முன்னேறி வந்து கொண்டிருக்கும்போது இந்தமாதிரி பலரது இழப்புகளையும் அதிர்ச்சிகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

தைரியமான பெண்ணாச்சே

தைரியமான பெண்ணாச்சே

ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராக இருந்தாலும் பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். அதில் முக்கியமானது சின்னப்பாப்பா பெரிய பாப்பா. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் முல்லை கேரக்டரில் இவர் பாந்தமாக நடித்திருப்பார். ரசிகர்கள் அதிகம் குவியவும் இந்த முல்லைதான் காரணம். தைரியமான பெண்ணாக மட்டுமல்லாமல் அனைவருக்கும் மோட்டிவேஷன் தரும் பெண்ணாகவும் வலம் வந்தவர் சித்து.

Recommended Video

    தற்கொலை செய்துகொண்ட Chitra கடைசியாக Instagram-வில் போட்ட பதிவு
    பாசமும்

    பாசமும்

    ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து இந்த அளவிற்கு வந்ததால் அனைவரிடமும் அன்பையும், பாசத்தையும் கொட்டுவார். ஆள் பார்த்து தரம் பார்த்து பழகக் கூடியவர் இல்லை. அனைவரிடமும் அன்பாக நெருங்கிப் பழகுவார். அப்படிப்பட்ட பெண் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சிதான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+