மாமனே உன்னைக் காணாமல்.. காருக்குள்ளேயே ஏங்கிக் கிறங்கும் சித்து.. செம ஹாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜே சித்து அந்த சீரியலிலும் கதிரை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் உண்மையில் அவருடைய வருங்கால கணவரை நினைத்து உருகி பாட்டு பாடியிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதுவும் திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாலா இந்த ஏக்கம் என்று அவர் பாடிய பாட்டை கேட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது கதிர் முல்லை ஜோடிக்கு தான். இந்த சீரியலில் முல்லையாக நடிக்கும் சித்து ஒரு தொகுப்பாளராக பல சேனல்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

இவர் வேலை செய்யாத சேனலே இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லா சேனல்களிலும் போய்விட்டு தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலில் தற்போது ரொமான்ஸ் சீன்களில் பின்னி பெடலெடுத்து கொண்டிருக்கிறார். காதல் செய்து கொண்டிருப்பவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இவரது கொஞ்சலும் ரொம்பவே பிடித்திருக்கிறதாம் .பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பதற்கே இவருடைய கேரக்டர் தான் என்று கூறுகிறார்கள்.

டான்ஸில் சூப்பர்

டான்ஸில் சூப்பர்

இவர் சீரியலில் மட்டுமல்ல பல ரியாலிட்டி ஷோக்களிலும் டான்ஸ் ஆடி ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் . இவருக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தனர் .பல ஆண்டுகளாக இதே பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அதற்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. சமீபத்தில்தான் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. ஆனால் திருமண தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

அடிக்கடி ஷூட்டிங்

அடிக்கடி ஷூட்டிங்

நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இவரும் இவரது கணவரும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். பல ரசிகர்கள் இவருக்கு திருமணம் எப்போது என்று ஆர்வமாக இருந்த நிலையில் இவருடைய நிச்சயதார்த்தத்தை எளிமையாக முடித்து ரசிகர்களை ஷாக் ஆகி விட்டார் .அதுவரைக்கும் யாருக்கும் சொல்லாமல் நிச்சயதார்த்த அன்றுதான் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

அடிக்கடி சந்திப்பு

அடிக்கடி சந்திப்பு

அது கோரானா காலகட்டத்தில் நடைபெற்றதால் எளிமையான முறையில் நடத்தி இருந்தார் .ஆனால் இப்போ அடிக்கடி இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் சரி வெளியிடங்களிலும் சரி இருவரும் ஒன்றாக அடிக்கடி போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்கள் .இவருடைய போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியும் சில நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் தான் வருங்கால கணவருடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

சூடான முத்தம்

சூடான முத்தம்

அதில் அவர் இவருக்கு முத்தம் கொடுத்ததும் அவர் கட்டிபிடித்து தனது பாசத்தை வெளி கட்டியிருந்தார் .இதைப் பார்த்து பலரும் பொறாமைப்பட்டும் ,சிலர் கலாய்த்தும், சிலர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். தற்போது இவர் ஃபேன்ஸ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. கண்களில் ஏக்கத்தோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது மாமனே உன்னக் காணாம வட்டியில் சோறும் உண்ணாம என்னும் பாடலுக்கு பாடலை செமையாக பாடிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இவரின் ஃபேன் பேஜ்சுகளில் வைரலாக பரவி வருகிறது.

மாமனே உன்னைக் காணாம

மாமனே உன்னைக் காணாம

ரசிகர்களுடன் இணைந்து இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருவார். அவர்களின் பிறந்தநாளுக்காக இருந்தாலும் சரி திடீரென்று இவர் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் இவருக்கு மிகவும் சந்தோஷமாம். அதனால் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வட்டம் பெருகிக் கொண்டே வருகிறது. சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி .

கலக்கும் சித்து

கலக்கும் சித்து

ஒரு அளவுக்கு மேலே சென்று விட்டால் அவர்கள் தங்கள் ரசிகர்களை மதிப்பதே இல்லை , கண்டு கொள்வதில்லை. ஆனால் இவர் இவருடைய போட்டோக்களுக்கு இவருடைய ரசிகர்கள் போடும் கமெண்டுகளுக்கு தவறாமல் பதிலளித்து அவர்களுடன் நேரடி தொடர்பிலும் இருக்கிறாராம். அதனால்தான் அவருடைய ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் சித்துவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+