தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்லை.. பரபரப்பான சித்ரா வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் தற்கொலை பண்ணிக்கிற அளவிற்கு கோழை கிடையாது என்று விஜே சித்ரா முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதைப் பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் சீரியலில் முல்லையாகவும் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்த சித்ரா திடீரென்று இறந்துவிட்டார் . அதுவும் அவர் தற்கொலை செய்து இறந்து விட்டார் என்னும் செய்தியை கேட்டு அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர் .

அவர் அந்த மாதிரி பொண்ணு கிடையாது என்று அனைவருமே பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய பழைய வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. அதில் தான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை அவர் கொடுத்த வீடியோ பெரும் வைரலாகியுள்ளது.

கோழைத்தனம்

கோழைத்தனம்

ஆதன் டிவி என்ற சானலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியிருந்தார் சித்ரா. அதில், சினிமா பீல்டில் இருக்கும் நடிகைகளுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றியும், அதனை என்னால் சமாளிக்க முடியும். நான் தைரியமான பொண்ணு. தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் . அந்த செயலை நான் எப்போதும் செய்யமாட்டேன் என்று கூறியிருப்பதுதான் தற்போது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துயரத்தில் ரசிகர்கள்

துயரத்தில் ரசிகர்கள்

விஜே வாக இருந்த சித்ரா அதற்குப்பிறகு சீரியல்களில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் அவர்கள் வீட்டுப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்தவர். அவருடைய இறப்பை கேள்விப்பட்டதும் திரைத்துறையினரும் ரசிகர்களும் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர் .எப்போதுமே சிரித்த முகமாக இருந்தவரை தற்போது இந்த சீரியலிலும் நிஜத்திலும் அவர் இல்லை என்பதை யாராலும் நம்ப முடியாமல் தான் தவித்து வருகிறார்கள்.

நிறைய வீடியோக்கள்

நிறைய வீடியோக்கள்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த இவர் அடிக்கடி போஸ்ட் போட்டு அவருடைய ரசிகர்களிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். அவர்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போல பெரும் துயரத்தில் தான் இருந்து வருகிறார்கள். அவரது இறப்பில் பெரும் சந்தேகங்களும் முடிச்சுகளும் இருக்கும் நிலையில் அவரது இறப்பு தற்கொலைதான் என்று காவல்துறை வெளியிட்டிருக்கிறது .

யாராலும் நம்ப முடியலை

யாராலும் நம்ப முடியலை

இதை நம்பாத அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் கண்டிப்பாக அப்படி செய்பவர் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் எவ்வளவு தைரியமான பெண் என்று எல்லோருக்குமே தெரியும் அடிமட்டத்திலிருந்து இந்த நிலைமைக்கு வந்து இவ்வளவு சாதித்த பிறகும் இந்த செயலை செய்பவர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். நடுத்தர வர்க்கமாக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் இவரது பெற்றோர்களுக்கு தெரியாமல் தான் இந்த சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

கல்லூரிக் காலத்திலேயே நடிப்பு

கல்லூரிக் காலத்திலேயே நடிப்பு

காலேஜ் படிக்கும்போதே மக்கள் தொலைக்காட்சியில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அவர் வீட்டிற்கு தெரிந்து வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு அவர்களின் ஒத்துழைப்போடு தான் மீண்டும் இந்த துறையில் தடம் பதித்திருக்கிறார். யாருடைய துணையுமின்றி தனியாக இந்தத் துறையில் காலடி எடுத்துவைத்து சாதித்தவர்களின் இவரும் ஒருவர் எப்போதுமே முன்னேற வேண்டுமென்று தான் அவரது தாரக மந்திரமாக இருந்து வந்தது.

சாதனை மனப்பான்மை

சாதனை மனப்பான்மை

தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் தான் செய்யும் வேலைக்கு விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதும் அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அதையெல்லாம் திடீரென்று தவிடுபொடியாக்கி விட்டு அவர் இல்லாததை நினைத்து இவருடைய ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். இவர் அடிக்கடி டிவி நிகழ்ச்சிகளில் பேட்டி அளிக்கும் போது கூட தன்னுடைய கடந்த கால கஷ்டங்களையும் அதில் தாண்டி வந்து தான் இன்று நிலைத்திருப்பதை பற்றி கூறியிருக்கிறார் .

ரசிகர்கள் மனதில் இடம்

ரசிகர்கள் மனதில் இடம்

அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்ற பிறகு இவர் ஆதன் டிவி என்ற தனியார் சானலுக்கு அளித்த பேட்டியில், தனது சுய கவுரவத்தையும், தான் கடந்து வந்த கஷ்டங்களையும் கூறியிருக்கிறார் . அதில் இந்த பீல்டில் இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணும்போது பலர் என்னை மட்டும் அல்லாமல் என்னை போல சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் மிரட்டல் விடுத்தும் தப்பான நோக்கத்தோடும் பேசியிருக்கிறார்கள்.

தைரியமா இருக்கணும்

தைரியமா இருக்கணும்

நான் கூட அதற்கு போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணி சம்பந்தப்பட்டவர்களை அரெஸ்ட் பண்ணி இருக்கிறார்கள் . இருந்தாலும் சிலர் இந்த மாதிரி சூழ்நிலைகளில் சிலருக்கு பயந்து கோழைத்தனமான முடிவை எடுக்கிறார்கள். நான் அந்த மாதிரி எந்த சூழ்நிலையிலும் முடிவு எடுக்க மாட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏறி வந்தாச்சு இன்னமும் பெரிய விருதுகளை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார் சித்ரா.

நான் கோழை அல்ல

நான் கோழை அல்ல

இதேபோல தனது கனவுகளின் பட்டியலையும் அந்த வீடியோவில் அவர் அழகாக விளக்கியுள்ளார். அத்தனை போல்டாக அந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார். தற்கொலை செய்து கொள்வது எவ்வளவு பெரிய கோழைத்தனம் என்பதையும் விவரித்துள்ளார். இப்படிப் பேசிய சித்ராவா இப்போது இப்படி செய்து விட்டார் என்று அதைப் பார்க்கும் பலரும் வேதனையில் கண்கள் கசிய சித்ராவை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+