Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நேரத்தில் 3 இட்லிக்கு ஏக்கம்.. டிரஸ் கூட கடன் வாங்கி..அவமானமும் வெற்றியும்.. விஜே தீபிகா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த விஜே தீபிகா சமீபத்தில் தன்னுடைய ஆரம்பகால கஷ்டங்கள் மற்றும் சீரியலில் தான் நடிக்க தொடங்கிய பிறகு தன்னுடைய வாழ்க்கை மாறிய விதம் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். கூடவே அவருடைய அப்பாவும், அம்மாவும் தங்களுடைய மகள் பற்றி பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக சீரியலிலும் சரி சினிமாக்களிலும் சரி அதிகமாக வெளி மாநில நடிகர்களுக்கு தான் அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டை சார்ந்த பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் பல்வேறு திறமைகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிலும் ஒரு சிலர் மட்டும்தான் பல போராட்டங்களை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது பலருக்கும் பரிச்சயமான ஒரு நபராக விஜே தீபிகா மாறி இருக்கிறார்.

Television VJ Deepika Pandian Stores

ஆனால் ஆரம்பத்தில் ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தீபிகா ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் தீபிகாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த கிராமம். திருநெல்வேலி பக்கத்திலே அவருடைய கிராமம் இருப்பதால் இவர் திருநெல்வேலியில் தான் காலேஜ் படித்து இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அங்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று இருக்கிறது.

அப்போது கயல் ஆனந்தியின் தோழியாக அவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் கேரக்டர் விஜே தீபிகாவிற்கு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் சின்னதாக ஒரு இடத்தில் நடித்ததுமே இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. ஆனால் வீட்டில் சொன்னால் விட மாட்டார்கள் என்று வீட்டில் தான் மேற்படிப்பு படிக்க சென்னைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்னையில் காலேஜ் படித்துக் கொண்டு பார்ட் டைமில் தொகுப்பாளராகவும், நடிகையாகவும் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் கிராமத்தில் இருந்து வந்ததால் உடை மற்றும் பேச்சு வழக்கில் இவருக்கு சரியாக தெளிவு இல்லாததால் பலர் ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். அப்போது காலேஜ் படிக்கும் போது எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இவருக்கு காலையில் எப்படியாவது 3 இட்லி வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு கஷ்டம் இருந்திருக்கிறது.

இவர் கல்லூரியில் காலை ஷிப்டில் படித்திருக்கிறார். அதுபோல ஹாஸ்டலில் தங்கி இவர் படித்ததால் காலை நேர ஷிப்டில் இவரால் ஹாஸ்டலில் சாப்பிட முடியாதாம். ஆனாலும் தனக்குள் இருக்கும் ஆசை கனவை வெளியே சொல்லாமல் சிரித்தபடியே பிரண்ட்ஸ்களோடு ஜாலியாக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு ஆடிஷன் போவதற்கெல்லாம் தன்னுடைய பிரண்ட்ஸ்களிடம் கடன் வாங்கி தான் டிரஸ் போட்டுக் கொண்டு போவாராம்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு என்னுடைய வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர் கிடைத்தது அதிலும் சொற்ப வருமானம் கிடைத்ததால் என்னால் வாடகை கொடுக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். சென்னையில் பல நாட்கள் சாப்பிடாமல் தவித்திருந்த நாட்கள் உண்டு. ஆனால் இன்று எனக்குன்னு ஒரு வருமானம் வந்து கொண்டிருப்பதால் நான் விதவிதமாக சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறேன்.

3 இட்லிக்கு ஏங்கி போய் இருந்த நான் இன்று எவ்வளவு விலை இருந்தாலும் சாப்பாடு வாங்கி ருசி பார்த்து விட வேண்டும் என்று விதவிதமான சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எனக்கு முகப்பரு வந்ததால் என்னால் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் சீரியல் தரப்பினர் எனக்கு எவ்வளவோ சப்போர்ட் பண்ணினார்கள்.

ஆனால் என்னைப் பற்றி ட்ரோல்ஸ்கள் அதிகமாக வந்ததால் சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலைமை வந்தது. ஆனாலும் எனக்கு முகப்பரு வந்த விஷயத்தால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி எனக்கு youtube மூலமாக நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அதனாலயே நான் எல்லா கடனையும் அடைத்து விட்டேன் என்று விஜே தீபிகா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+