Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீரியட்ஸ் இருந்தாலும் கோவிலுக்கு போவேன்.. காரணம் இதுதான்! வி.ஜே தீபிகாவின் சர்ச்சை பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீசன் ஒன்றில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த விஜே தீபிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய யூடியூப் சேனலில் பீரியட்ஸ் இருந்தாலும் நான் கோவிலுக்கு போவேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக தமிழ் சீரியல்களில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. பல தமிழ் நடிகைகள் அதிகமான திறமையும் நடிப்பும் இருந்தாலும் அவர்களுக்கு ஏனோ பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் அவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும்தான் சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Television VJ Deepika Pandian Stores

அந்த வரிசையில் ஒருவர்தான் விஜே தீபிகா. விஜே தீபிகாவின் சொந்த ஊர் திருநெல்வேலி தான். திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமம் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தை சார்ந்த விஜே தீபிகா காலேஜ் படிக்கும் போது பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கயலின் பிரண்டாக சின்ன கேரக்டரில் நடித்து பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு நான் படிக்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு காலேஜ் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தொகுப்பாளராக மற்றும் நடிகையாக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தீபிகாவிற்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவருடைய உடை அலங்காரம் மற்றும் திருநெல்வேலி பேச்சு வழக்கு காரணமாக இவருக்கு பல வாய்ப்புகள் நழுவி போயிருக்கிறது. ஆனாலும் விடாமல் அவர் போராடிக் கொண்டிருந்த நிலையில் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர் கிடைக்க அதையும் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக விஜே தீபிகா நடித்திருப்பார். ஆரம்பத்தில் சில மாதங்கள் அவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய முகப்பரு பிரச்சனை காரணமாக அவரை சீரியலில் இருந்து விலக்கி இருந்தனர். அதற்கு பிறகு தீபிகாவிற்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி நடித்து வந்தார். அவரும் அந்த சீரியலில் இருந்து விலகிவிட மீண்டும் ஐஸ்வர்யா கேரக்டரில் தீபிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகையாக மட்டுமல்லாமல் youtube சேனல் ஒன்றை வைத்திருக்கும் விஜே தீபிகா தன்னுடைய அன்றாட நடவடிக்கைகள் பற்றி youtube சேனலில் அதிகமாக பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் இரண்டு வருடத்திற்கு முன்பு பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசுகையில், என்னுடைய வீட்டில் எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. அப்புறம் அம்மாவும் இருக்காங்க.

நாங்க மூணு பெண் பசங்க அப்புறம் அம்மா நான்கு பேர் இருக்கிறோம். அதனால எங்க வீட்டில் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவருக்கு பீரியட்ஸ் ஆகிவிடும். அந்த நேரத்தில் கோவில் திருவிழா அல்லது பொங்கல், தீபாவளி, சரஸ்வதி பூஜை, திருக்கார்த்திகை போன்ற பங்க்ஷன்கள் வரும்போது எங்க ஊர் வழக்கப்படி பீரியட்ஸில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் பங்க்ஷனில் கலந்து கொள்ளாமல் தனியாக இருப்பார்கள்.

ஆனால் இதை என்னுடைய அப்பா உடைத்து விட்டார். என்னுடைய பிள்ளைகள் எல்லாருமே சாமி கும்பிட வேண்டும்.. எல்லா பிள்ளைகளும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சாமிக்கு படையல் போட்டு இவ்வளவு விஷயங்களை செய்கிறேன். ஆனால் அவருக்கு உடலில் சின்ன பிரச்சனை இருப்பது இருக்கிறது என்பதற்காக அவளை மட்டும் நான் தனியாக பிரித்து வைக்க முடியாது என்று எங்களுடைய பீரியட்ஸ் நேரத்திலும் அப்பா சாமி கும்பிட கூப்பிடுவார்.

அதனாலேயே நாங்கள் அதையே பழகி விட்டோம். அது மட்டும் இல்லாமல் பீரியட்ஸ் டைமில் நாங்கள் பூஜை ரூமுக்கு கூட செல்வோம். என்னை பொருத்தவரை என்னுடைய குலசாமி அய்யனார், எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் என்னை ஏற்றுக் கொள்வார். என்னை எந்த விதத்திலும் அவர் ஒதுக்க மாட்டார்.

நார்மலான நாட்களில் நாங்கள் பூஜை அறைக்கு செய்வது போலத்தான் பீரியட்ஸ் நாட்களிலும் சென்று விபூதி, குங்குமம் எடுத்துக் கொள்வோம் என்று அந்த வீடியோவில் தீபிகா பேசியிருக்கும் நிலையில் ஒரு சிலர் இதை பாராட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இதை விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+