கணவரோடு சேர்ந்து மணிமேகலை கூறிய மகிழ்ச்சி செய்தி..குட்டி சாம்ராஜ்யம் தொடங்கியாச்சி..குவியும் வாழ்த்து
மணிமேகலை கிராமத்தில் புதியதாக வீடு கட்ட இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: வி.ஜே மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் நான்கிலிருந்து திடீரென வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் புதியதாக வீடு ஒன்று கட்ட இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மணிமேகலை கிராமத்தில் செட்டிலாக இருக்கிறாரா என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வி அதிகரிக்கிறது.

சன் மியூசிக்கில் பிரபலம்
சன்மியூசிக் புகழ் 'விஜே மணிமேகலை' 90'ஸ்கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பெரும்பாலான இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலால் பிரபலமாய் இருக்கிறார். இவர் ஒருமுறை சன் மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது.. அதனிடையே ஒளிபரப்பப்பட்ட லாரன்ஸ் பட பாடலில் ஆடிய இளைஞரின் நடனத்தால் கவரப்பட்டு.. அவரை பாராட்டுவதற்காக இவர் தொடர்பு கொண்டது இறுதியில் காதலில் வந்து முடிந்தது.அந்த இளைஞர் தான் தற்பொழுது விஜே மணிமேகலை காதலித்து திருமணம் முடித்து இருக்கும் சினிமா நடன உதவி இயக்குனர் ஹுசைன் ஆவார்.

காதல் திருமணம்
மதத்தை காரணம் காட்டி இவர்களுடைய காதலுக்கு மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு கிளம்ப தன் பெற்றோரை எதிர்த்து ஹாசனை திருமணம் செய்து கொண்டார் .இவரது கணவர் டான்ஸ் சூட்டிங்கில் பிஸியாக இருக்க, இவரும் சின்னத்திரையில் போட்டியாளர்,வர்ணனையாளர், பேச்சாளர், என்ற பன்முகத் திறமை யோடு ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனியாக யூடியூப் சேனல்கள் வெற்றிகரமாக நடத்திவருகிறார். யூடியூப் சேனலில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக அப்லோட் செய்து வருவது இவர்களது பாலோயர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிராமத்தில் கொண்டாட்டம்
தன் கணவர் ஹுசைனுடன் அவ்வப்போது கிராமத்திற்குச் செல்லும் மணிமேகலை..அங்கு அந்த ஊர்க்காரர்கள் உடன் இணைந்து செய்யும் குறும்புத்தனங்கள் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.கொரனா ஊரடங்கு காலத்தில் இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளையே பெற்று வைரலானது.இந்த நிலையில் தன்னுடைய கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி இருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். தற்போது அதே இடத்தில் தான் புதியதாக வீடு கட்ட இருப்பதாக ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.

புது துவக்கம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இப்ப வரைக்கும் அதற்கான காரணத்தை தெளிவாக ரசிகர்களிடம் கூறாத நிலையில், மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா? என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்து கொண்டிருக்கிறது. தற்போது மணிமேகலை தன்னுடைய கிராமத்தில் புது வீடு கட்ட துவங்கி இருக்கும் செய்தியை பார்த்து ரசிகர்கள் இத்தனை நாட்கள் உழைத்தது போதும் என்று முடிவெடுத்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சொந்த ஊரில் மணிமேகலை அடுத்தடுத்து எடுத்து வைக்கும் முயற்சிகளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

குட்டி சாம்ராஜ்யம்
மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்திற்கு,"HM பண்ணை மாளிகைக்கு பாலக்கால் பூஜை. கடவுளின் கிருபையுடன் கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜத்தை உருவாக்க தொடங்கி இருக்கிறோம். நாங்கள் கிராமத்துக்கு செல்லும்போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கப் போகிறோம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த பதிவிற்கு சூரிய வம்சம் திரைப்படத்தில் வரும் மோட்டிவேஷனல் மியூசிக் வைத்திருக்கிறார். இதை குக் வித் கோமாளியில் பிரபலங்களான ஸ்ருதிஹா, ஷாம் விஷால், சிவாங்கி, கிஷோர், பிரிட்டிசன் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications