விஜே மகேஸ்வரி வீட்டில் இத்தனை வசதிகளா? எவ்வளவு பெரிய பார் செட்டப்.. மீனின் விலை இத்தனை லட்சமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஜீ தமிழில் தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான விஜே மகேஸ்வரி ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலம் ஆகி இருந்த நிலையில் தற்போது தனியார் சேனலில் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விஜே மகேஸ்வரி பெரிய அளவில் பிரபலமடைந்து இருந்தார். ஆனால் அதிக நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு பாசிட்டிவ் போலவே நெகட்டிவும் அதிகமாக கிடைத்தது. அதிலும் அசீமோடு இவருக்கு ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் பேசப்பட்டது.

Vj Maheshwari home tour video and fans reaction

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் "புதுக்கவிதை" சீரியலிலும் விஜே மகேஸ்வரி நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் அதிக நாட்கள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. திடீரென்று முடிக்கப்பட்டது. அதே போல ஜீ தமிழிலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே மகேஸ்வரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் youtube சேனலில் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி இருக்கும் நிலையில் அந்த வீடு குறித்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் விஜே மகேஸ்வரியின் வீடு பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனாலும் வீடு முழுக்க கலை நயத்தோடும் யூனிக்கான பொருள்களோடும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. விஜே மகேஸ்வரியின் வீட்டில் மூன்று லட்சம் மதிப்புள்ள மீனை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த மீனை வாங்கும் போது குட்டியாகத்தான் வாங்கினாராம். அப்போது ஐம்பதாயிரத்திற்கு தான் வாங்கினேன்.

ஆனால் அந்த மீன் இப்போது லட்சங்களை தாண்டி விற்க முடியும் ஆனாலும் அதை நான் விற்க மாட்டேன். என்னுடைய வீட்டில் வாஸ்துவிற்காக வைத்திருக்கிறேன் என்று அந்த மீனை குறித்து பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய வீட்டில் ஒரு பிரம்மாண்டமான பார் செட்டப் வைத்திருப்பதையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

என்னுடைய வீட்டில் எல்லாவிதமான மது வகைகளும் இருக்கும். வருகிறவர்களுக்கு நான் இதை பருக கொடுப்பேன். அதுபோல என்னுடைய வீட்டில் விதவிதமான ஒயின் ஐட்டங்களும் இருக்கிறது. நான் தினமும் அதை குடிக்கவில்லை என்றாலும் எப்போது தோன்றுகிறதோ அப்போது எடுத்து குடிப்பேன். என்னுடைய வீட்டில் மிகப்பெரிய தியேட்டர் ரூம் இருக்கிறது.

இங்குதான் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகளோடு நான் படம் பார்ப்பேன். இங்கே யாரேனும் மது அருந்திக் கொண்டிருந்தால் என்னுடைய மகனை அப்போது படம் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டேன். மற்ற நேரங்களில் என்னுடைய மகனும் எங்களோடு தான் இருந்து netflixel படம் பார்ப்போம் என்று விஜே மகேஸ்வரி கூறியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+