விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! வார்னிங் கொடுத்த மகேஸ்வரி.. மகனுக்கு கொடுத்த அட்வைஸ்
நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தில் நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என நம்புகிறேன் என்று வி.ஜே மகேஸ்வரி தன்னுடைய மகனைக் குறித்து பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜே மகேஸ்வரி தன்னுடைய மகனோடு புகைப்படத்தை வெளியிட்டு கூடவே குறிப்பு ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் விஜே மகேஸ்வரியின் மகனுடைய புகைப்படங்களை சிலர் ட்ரோல் செய்து இருக்கின்றனர்.
தன்னை பற்றி நெகட்டிவ் ஆக பேசி வருபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக மகேஸ்வரி பதிவை தட்டி விட சிலர் இதை பாராட்டி வருகின்றனர்.

வி.ஜே மகேஸ்வரியின் கருத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு மட்டும் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மாறி மாறி பேட்டி கொடுத்துக்கொண்டு தங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை இதில் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு தகவல்களையும் கருத்துக்களையும் கூறி வந்தார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு தவறான முன்னுதாரணமாக சமுதாயத்தில் ஆகிவிடக்கூடாது என்று அவர் தன்னுடைய கருத்தை பல இடங்களில் முன்வைத்து வந்தார்.

சுய மரியாதையை பாதிக்கும் வார்த்தை
அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் பல இடங்களில் அடுத்தவர்களின் சுயமரியாதை இழக்கும் வகையில் பேசி இருப்பது பாதிக்கப்பட்டவரின் மனநிலையை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தின் மனநிலையையும் பாதிக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ளவே இல்லை. இதை அங்கீகரித்தால் சமுதாயத்திலும் இதையே பலரும் பண்ணலாம் என்று பலர் புரிந்து கொள்வார்கள் என்று விஜே மகேஸ்வரி கூறி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சில வாரங்களில் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டு இருந்தார். ஆனால் இவருடைய ரசிகர்கள் அதிகமானோர் விஜே மகேஸ்வரியின் வெளியேற்றம் நியாயமானது அல்ல என்று கருத்து கூறி வந்தனர்.

வார்த்தைகளால் ஏற்பட்ட காயம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்த விஜே மகேஸ்வரிக்கு அசீமுடன் பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனையில் இவரை அசீம், ச்சீ வாயை மூடு நீ எல்லாம் வெளியே போனா உன்னை காரி துப்புவார் என்று பேசியது, தன்னை எந்த அளவிற்கு மனதை பாதித்தது என்பதை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி கண்கலங்கி அழுதார். அது மட்டும் அல்லாமல் இவர் தன்னை அவமானப்படுத்தியதை தன்னுடைய மகன் தன்னிடம் கேட்ட கேள்வியால் தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டேன் என்றும் அப்போது கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து இவர் அசீம் உடைய சில வார்த்தைகளால் தான் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்பதை தொடர்ந்து கூறி வருகிறார்.

வி.ஜே மகேஸ்வரியின் வார்னிங்
இந்த நிலையில் அசீம் ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதளத்தில் விஜே மகேஸ்வரியை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். விஜே மகேஸ்வரி என்ன போஸ்ட் செய்தாலும் அதில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களும் இடம் பெற்று விடுகிறது. இந்த நிலையில் விஜே மகேஸ்வரியின் மகனையும் சமூக வலைதளத்தில் சிலர் ட்ரோல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தன்னுடைய மகனோடு புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட மகேஸ்வரி, "ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, என் மகனே! நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை, நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ மாற்றமாக இருப்பாய் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அம்மா உன்னை பாதுகாப்பேன்" என்று கூறி அதற்கு கீழே "குறிப்பு: புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கையும் கொடுத்து இருக்கிறார். இது தன்னைப் பற்றியும் தன்னுடைய மகனைப் பற்றியும் சமூக வலைத்தளத்தில் தவறாக பேசுபவர்களுக்கு கொடுக்கும் பதிலடியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு விரிவான எந்த தகவல்களையும் இதுவரைக்கும் மகேஸ்வரி கூறாமல் இருந்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications