நடிகர் நெப்போலியன் மகனை சந்திக்க அமெரிக்கா சென்ற டிஜே பிளாக் மற்றும் மாகாபா.. விஷயம் இதுவா?
சென்னை: நடிகர் நெப்போலியன் குடும்பத்தை பார்ப்பதற்காக விஜய் டிவி மாகாபா மற்றும் டிஜே பிளாக் இருவரும் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் அங்கு இவர்கள் நெப்போலியனின் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏறலாம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான்.
அடுத்த வாரம் லோக்சபா தேர்தல் முடிவு.. ஆனால்! அதற்கு முன்பே விஜய பிரபாகரன் போட்ட கூல் போஸ்டை பாருங்க!
ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியனின் இளைய மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் உடல் நல குறைவால் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது இந்த நோயை கண்டுபிடித்து விட்டவர்களாம். அவர் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார் என்று அப்போது மருத்துவர்கள் சொன்னார்களாம்.அவர்கள் சொன்னபடியே பத்து வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த நேரத்தில் உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து கிடைக்கவில்லையாம். அப்போது திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டாராம். உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டுக் கொண்டு போன நெப்போலியன் அங்கு தான் சிகிச்சை எடுத்து வந்து இருக்கிறார். அந்த இடத்தில் தன் குழந்தையைப் போல பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கிறாராம்.
தற்போது இந்த மருத்துவமனையில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நெப்போலியன் மகனை பார்ப்பதற்காக விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா மற்றும் டிஜே பிளாக் இருவரும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு நெப்போலியன் குடும்பத்தோடு டிஜே பிளாக் மற்றும் மாகாபா இருவரும் புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை நெப்போலியன் மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு நான் மாகாபா மற்றும் டிஜே பிளாக்கை முதல்முறையாக சந்தித்து இருக்கிறேன். இது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், கலகலப்பாகவும் இருந்தது என்று தனுஷ் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications