அடுத்த வாரம் லோக்சபா தேர்தல் முடிவு.. ஆனால்! அதற்கு முன்பே விஜய பிரபாகரன் போட்ட கூல் போஸ்டை பாருங்க!
சென்னை: விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு இருக்கும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய பிரபாகரன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலான ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு சினிமாவில் நடிப்பதை கணிசமாக குறைத்து இருந்தார். அதே நேரத்தில் அரசியலில் முக்கிய பிரபலமாக மாறி எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாகவே சினிமா மற்றும் அரசியலில் அதிகம் ஈடுபடாமல் இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

இது விஜயகாந்த் குடும்பத்தை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இப்ப வரைக்கும் விஜயகாந்த் குறித்து பலரும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்த் போலவே அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடுகிறார்.
அதேபோல விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த முறை ஜெயித்த மாணிக்க தாகூர் இந்த முறையும் போட்டி இடுகிறார். அதுபோல பாஜக சார்பாக நடிகை ராதிகாவும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. ரிசல்ட் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த தொகுதியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் எல்லோரும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் எந்த பதட்டமும் இல்லாமல் விஜய பிரபாகரன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலான ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் "என்னை நானே தயார்படுத்துகிறேன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஒயிட்டன் ஒயிட் ட்ரெஸ்ஸில் விஜய பிரபாகரனின் புகைப்படத்திற்கு அவர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் "கட்சி சேரா" பாடலுக்கு எடிட் செய்து இருக்கிறார்.
இந்த போஸ்ட் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் லைக் மற்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதில் அதிகமானோர் விருதுநகர் தொகுதியின் வெற்றி நாயகன் என்று விஜய பிரபாகரனை அழைத்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் விஜய பிரபாகரனுக்கு லவ் செட் ஆகிவிட்டதா? அதனால் தான் இவ்வளவு ஜாலியாக போஸ்ட் போட்டு இருக்கிறாரா? என்று கிண்டல் செய்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் நீங்கள் அரசியல் பிரமுகராக மட்டுமல்லாமல் சினிமாவிலும் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இப்படியாக விஜய பிரபாகரன் வெளியிட்ட போஸ்ட்க்கு கமெண்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications