ஜீ தமிழில் என்னுடைய கடைசி நாள்.. உருக்கமாக போஸ்ட் போட்ட மணிமேகலை.. குவியும் பாராட்டு
சென்னை: விஜே மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை ஜீ தமிழில் தனக்கு கடைசி நாள் சூட்டிங் என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜே மணிமேகலைக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் ஸ்டார் மியூசிக்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய மணிமேகலை டான்ஸ் மாஸ்டர் ஹுசைனை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதலில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை பிறகு தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.

மணிமேகலைக்கு கிடைத்த வாய்ப்பு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்திருந்தார். அப்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆனது. அதோடு மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்திருந்தனர். ஆனாலும் விஜய் டிவியை விட்டு வெளியே வந்த மணிமேகலை சில மாதங்களாக எந்த சேனலிலும் வேலை செய்யாமல் இருந்தார்.
பிறகு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி ரீலோட் 3 சீசனில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். உண்மையான உழைப்பும், திறமையும் இருத்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு மணிமேகலையே எடுத்துக்காட்டாக இருக்கிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் என்டர்டெய்னர் தொகுப்பாளர் என்ற பட்டம் மக்கள் மத்தியில் இவருக்கு கிடைத்தது.

கடைசி நாள் சூட்டிங்
இப்போது பலருடைய பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கும் மணிமேகலை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் கடைசி நாள் ஷூட்டிங் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் பாராட்டுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த வாய்ப்பு தனக்கு கிடைப்பதற்கு காரணமானதாக இருந்தவர்களுக்கும் மணிமேகலை நன்றி தெரிவித்திருக்கிறார். மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் செய்த அட்ராசிட்டி வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications