எல்லோரும் அங்க பில்லர் தான் ஆனால்!? மணிமேகலை திடீர் வெளியேற்றம் குறித்து CWC சக்தி கூறிய பதில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது குறித்து ஏற்கனவே கோமாளியாக இருந்த சக்தி சில தகவல்களை லைவில் கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருந்து மணிமேகலை விலகி இருக்கிறார்.

அவர் எதற்காக விலகினார் என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சக்தி சில தகவல்களை லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கூறியிருக்கிறார்.

எலிமினேஷன் இல்லை

எலிமினேஷன் இல்லை

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. முதல் எலிமினேஷன் ஆக கிஷோர் வெளியேற்றப்பட்டது சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. அதை தொடர்ந்து கடந்த வாரத்தில் வீஜே விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் டேஞ்சர் சோனில் இருந்தனர். இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று பெருத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர்கள் இருவரும் அசத்தலாக சமையல் செய்திருப்பதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு எலிமினேஷன் இல்லை என்று அறிவித்திருந்தனர்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

2019 இல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டு இருக்கிறேன். உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்து இருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவு அன்பு கிடைத்தது. அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக கோமாளியாக கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக இருக்கும் மணிமேகலை திடீரென தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக அதில் கூறியிருந்தார். நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

பிரபலங்களின் வாழ்த்து

பிரபலங்களின் வாழ்த்து

இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் எதனால் மணிமேகலை திடீரென வெளியேறினார் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், மணிமேகலையோடு நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களும் அவருடைய நண்பர்களும் பல பிரபலங்களும் தொடர்ந்து மணிமேகலைக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். காரணம் அடுத்து மணிமேகலை செய்ய போகும் செயல் வெற்றியடைய வேண்டும் என்றும் அடுத்த கட்ட முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சக்தியின் பாராட்டு

சக்தியின் பாராட்டு

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக பலருக்கும் பிரபலமான சக்தி தற்போது லைவில் மணிமேகலை பற்றி பேசி இருக்கிறார். அதில், மணிமேகலை அடுத்த இதுதான் லாஸ்ட் எபிசோடு இனி நான் வரமாட்டேன் என்று சொல்லி இருக்காங்க. அது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு செம டேலண்ட். முடிவு டக்கு டக்குனு எடுக்குறதுக்கு அவங்க சான்சே இல்லை. அங்க இருக்கிறவங்க எல்லாருமே ஒரு பில்லர்ஸ் தான். மணிமேகலைக்கு அடித்தளமான ஒரு டேலண்ட் இருக்கு. மணிமேகலை எதற்கும் எஃபெக்ட் போட்டு அவ்வளவு மெனக்கிடுவாங்க ரொம்ப சிறந்த ஒரு என்டர்டைனர் கோமாளியாக இருந்தார்.

பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

ஆனால் அவங்களோட மைண்ட்ல ஒரு அப்டேட் ஆக வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இனி இதற்கு மேல் அவருக்கு கிடைக்கும் சக்சஸில் அவர் கண்டிப்பாக இன்னும் பெருசா கலக்குவாங்க ன்னு நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். எமோஷனலாக சக்தி பேசிய லைவ் வீடியோவை ரசிகர்கள் பார்த்து அப்போ இனி மணிமேகலைக்கு பதிலாக சக்தி தான் கோமாளியாக கலந்து கொள்ள இருக்கிறாரா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கும் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாப்போம். இப்போ இருக்கிறது புது டீம் அவங்க எல்லாருமே சிறப்பா செஞ்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்கிறது...! என்று அந்த லைவில் சக்தி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+