எங்க பார்த்தாலும் கொரோனாவா.. என்னய்யா இப்படி ஆகிப் போச்சே.. டர்ர்ர் ஆன மணிமேகலை!
சென்னை: கொரோனாவைரஸ் நம்ம மக்களின் ஜாலிக்கும் உலை வச்சுரும் போல இருக்கே... மெரீனா பீச்சில் எப்போதும் கூட்டம் கூட்டமாக காணப்படும் நம்ம மக்கள் கொரோனாவைரஸ் பீதி காரணமா பீச் பக்கமே வராம.. புறக்கணிச்சுட்டாங்க.
Recommended Video
நம்ம விஜே மணிமேகலை பீச்சு பக்கம் போயி டர்ர்ர் ஆகிட்டேன்னு போட்டோ போட்டு.. அலர்ட் ஆயிக்கடா ஆறுமுகம்.. அலர்ட் ஆயிக்கடான்னு கண்ணில் நீர் வராம சொல்லாம சொல்லி இருக்கார்.
இப்படித்தான் இருக்குமா இந்த கோடை காலத்துல நம்ம மெரீனா பீச்? மட்ட மதியம்னு கூட பார்க்காமல் மொட்டை வெயிலில் நம்ம ஜோடிகள் ரொமான்ஸ் செய்த இடமாச்சே...

அதிக வெப்பம்
வசிக்கும் இடத்தில் அதிக வெப்பம் இருந்தாலும், உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தாலும் கொரோனாவைரஸ் தாக்காதுன்னு சொல்லி இருக்காங்க. ஆனாலும் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை நம்ம காதல் ஜோடிகளுக்கு. எதற்கும் பயப்படாமல் உச்சி வெயிலில் முக்காடு போட்டுக்கொண்டு..இல்லை குடை பிடித்துக்கொண்டு காதல் செய்த ஜோடிகளுக்கு கொரோனாவைரஸ் மரண பீதியை கிளப்பி விட்டிருக்கு. பீச்சில் ஆளரவமே இல்லை.

மணிமேகலை டர்ர்ர்
பீச்சுப் பக்கம் காத்து வாங்கப் போன நம்ம மணிமேகலை அங்கு ஒருத்தரும் இல்லாதது கண்டு டர்ர்ர் ஆகிப்போயிட்டதாக போட்டோ போட்டு இருக்கார். எதுக்கும் பாதுகாப்பா இருப்போம் எல்லாரும்னு தனக்குத் தானே ஆறுதலையும் சொல்லிக்கொண்டு பயப்படாத மாதிரியே தில்லா போட்டோவுக்கு ஒரு போஸ் குடுத்துட்டு, அதையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு கொரோனாவைரஸ் பக்கம் போட்டோ மூலம் கவனத்தை திருப்பி விட்டு இருக்கார்.

பள்ளிகள் விடுமுறை
கொரோனாவைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. கொரோனாவைரஸ் தாக்கம் காரணமாக திருச்சியின் முக்கிய சுற்றுலா தளமான முக்கொம்பு மேலனை பூங்காவும், வண்ணத்துப் பூச்சி பூங்காவும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கூட்டமான இடங்களில்
சென்னையில் கூட்டமான இடங்களில் மக்கள் கவனமாக இருக்கவும்.. அப்படி தேவை இல்லாமல் கூட்டம் கூட வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இதில் முக்கிய இடங்களாக பார்க்கப்படும் ரயில்வே ஸ்டேஷன், கோயம்பேடு பேருந்து நிலையம்...! ஆனால், இதுக்கெல்லாம் அதி முக்கியயமான பொழுது போக்கு இடமான பீச்...ஆட்கள் இல்லாமல் ஏக்கப் பெருமூச்சு விட வைக்குது.

கல்லா
மழை வந்தாலும்.. இடி இடிச்சாலும் ஷூட்டிங்.. கைக்கு காசு என்று சினிமா, தொலைக்காட்சி ஷூட்டிங் நடந்துகிட்டு இருந்தது.ஆனால், அதுக்கும் வேட்டு வக்கற மாதிரி இப்போ ரத்துன்னு அறிவிச்சு இருக்காங்க...அந்த ஃபீலிங்சில் மணிமேகலை போட்டோ உள்ளுக்குள் கதறினாலும்.. வெளியில் சும்மா பந்தாவா...வாவ் தலைவி கலக்குறீங்க போங்கன்னு சொல்ற அளவுக்கு போட்டோ பதிவிட்டு இருக்கார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications