கனவு நிறைவேறியது! கல்யாணம் ஆகி 7 வருடங்களுக்கு பிறகு மணிமேகலை சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜே மணிமேகலை தன்னுடைய கல்யாணத்திற்கு பிறகு தான் ஆசைப்பட்ட மாதிரி சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டேன் என்று எமோஷனலாக ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை தொடங்கிய மணிமேகலை விஜய் டிவி பக்கம் வந்ததும் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுபோல மணிமேகலையின் குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தான் மணிமேகலையின் குடும்பத்தினர் அவரோடு பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதுபோல ஹுசேன் லாரன்ஸ் மாஸ்டரிடம் டான்ஸராக பணியாற்றி வந்தார். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் ஹுசைன் சைடு டான்ஸராக டான்ஸ் ஆடுவதை பார்த்து அவர் மீது இம்ப்ரஸ் ஆன மணிமேகலை அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த நேரத்தில் இரண்டு குடும்பத்தின் சப்போர்ட்டும் இல்லாமல் மணிமேகலை தன்னுடைய வாழ்க்கையை தொடங்குவதற்கு அதிகமான கஷ்டங்கள் பட்டாலும் தன்னுடைய வாழ்க்கைக்காக அதையே சவாலாக எடுத்து இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
மணிமேகலை ஆரம்பத்தில் இருந்து தான் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். சூரிய வம்சம் திரைப்படத்தில் தேவயானி, சின்ராசு எப்படி குடும்பத்தின் தயவு இல்லாமல் முன்னேறி மேலே வந்தார்களோ அதுபோலவே தாங்களும் வருவோம் என்று தன்னம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருப்பார்.

அடிக்கடி சூரியவம்சம் பாடலை தான் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் பயன்படுத்துவார். சென்னையில் வாடகை வீட்டில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட நிலையில் இப்போது சென்னையில் புதிய வீடு ஒன்று வாங்கி இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் நேற்று பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப் போகிறேன், அதற்கு போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான் காரணம் என்று பிரியங்காவை தாக்கி மணிமேகலை போட்ட போஸ்ட் பெரிய அளவில் பேசப்பட்டது. ஏற்கனவே தன்னுடைய சொந்த ஊரில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கும் மணிமேகலை இப்போது சென்னையிலும் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.

புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருமணம் ஆன பின்னர் மாதம் 10,000 வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். ஆனால் இன்று சென்னையில் பிரைம் லொகேஷனில் ஒரு பிரீமியம் வீடு வாங்கி இருப்பதன் மூலம் எங்களது மிகப்பெரிய கனவு நனவாகிவிட்டது.
பிக் பாஸ் போட்டியாளருக்கு சப்போர்ட் தெரிவித்து மணிமேகலை பதிவு.. மாறாத குக் வித் கோமாளி நட்பு
இது என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் ஜீரோவாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வீட்டை புக் செய்து விட்டோம். அதன் பணிகள் எல்லாம் முடிந்து தற்போது தான் எங்கள் கைக்கு வந்தது என்று குறிப்பிட்டு ஸ்ரீ ராம ஜெயம், மாஷா அல்லாஹ் என்று பதிவிட்டு தன் பதிவை முடித்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
மணிமேகலையின் புதிய வீடு பார்த்தீங்களா?... கஷ்டப்பட்ட நாட்களை மறக்கலையே! வாழ்த்தும் ரசிகர்கள் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications