குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜே மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார் அந்த பதிவில் குலதெய்வ கோவிலில் தன்னுடைய கணவருடன் சாமி தரிசனம் செய்து நெகிழ்ச்சியான ஒரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்துறையில் தொகுப்பாளினிகள் என்றதும் ஒரு சிலருடைய முகம் டக்கென நினைவுக்கு வரும். அந்த வகையில் ஒருவர்தான் மணிமேகலை. அவர் காலேஜ் படிக்கும்போதே சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார். அந்த நேரத்தில் தான் லாரன்ஸ் மாஸ்டருடன் ஒன்றாக டான்ஸ் ஆடிய ஹுசேன் என்பவரை காதலிக்க தொடங்கினார்.

காதல் திருமணம்
இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மணிமேகலை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு தங்களுடைய திருமண வாழ்க்கையை அடிமட்டத்தில் இருந்து தொடங்கிய மணிமேகலை அதற்கு பிறகு இப்போது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு பண்ணை வீடு, பல கார்கள் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறி வெற்றி கண்டு கொண்டே இருக்கிறார்.
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக விஜய் டிவியிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக இருந்த மணிமேகலை கடந்த வருடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார். அப்போது விஜே பிரியங்கா உடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி அவர் வெளியிட்ட பதிவுகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
மணிமேகலையின் முடிவு
அந்த நேரத்தில் மணிமேகலைக்கு எதிராக விஜய் டிவியில் பிரபலங்கள் பலரும் கமெண்ட் போட்டு வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மணிமேகலை இப்போது ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மணிமேகலையின் ஒவ்வொரு வெற்றிக்கும் அவருடைய கணவர் துணையாக நிற்கிறார். அது குறித்து மணிமேகலை பல இடங்களில் பெருமையாக பேசியிருக்கிறார்.
காதல் தம்பதி
அதுபோல மணிமேகலை ரம்ஜான் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளை கொண்டாடி போஸ்ட்டுகள் போட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருடைய கணவரும் ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வந்திருந்தார். ஆரம்பத்தில் மணிமேகலை முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்ததால் இது லவ் ஜிகாத் என்றெல்லாம் சொல்லி வந்தனர். ஆனால் அதையெல்லாம் மணிமேகலை கண்டு கொள்ளவில்லை.
விமர்சனங்கள்
சில நேரங்களில் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனாலும் நாங்கள் எங்கள் இருவருக்கும் பிடித்த கடவுளை கும்பிடுகிறோம் யாரும் இதை செய்யக்கூடாது, இதைத்தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்குள் எந்த கட்டுப்பாடுகளும் விதித்தது கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.
ரசிகர்களின் வாழ்த்துக்கள்
அதேபோல மணிமேகலை இப்போது தன்னுடைய குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தன்னுடைய கணவரோடு குலதெய்வ கோவிலில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முஸ்லிம் மதத்தை சார்ந்த ஹுசேன் மணிமேகலைக்காக இந்து கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தது குறித்து பல பாராட்டியும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். அதே நேரத்தில் மணிமேகலை இதுபோல எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications