Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவமானப்பட்டு, கஷ்டப்பட்ட இடத்திலேயே கெத்து காட்டிய மணிமேகலை.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலை, தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து தன்னுடைய கணவரை திருமணம் செய்த போது அவமானப்பட்ட அதே இடத்தில் இப்போது சாதித்து காட்டியதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

தொகுப்பாளினியாக பலருக்கும் பரீட்சையமான மணிமேகலை சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதிலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாகவும், தொகுப்பாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

television vijay tv manimegalai

மணிமேகலை சின்னத்திரையில் எப்படி ரசிகர்களுக்கு பிரபலமானாரோ அதைவிட சமூக வலைத்தளத்தில் அதிகமாக பிரபலமாக இருக்கிறார். தன்னுடைய வீட்டில் தான் செய்யும் சின்ன சின்ன வேலைகளையும் அடிக்கடி வீடியோ போட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதோடு தான் வாங்கும் சின்ன பொருள் முதல் பெரிய பொருள் வரை எல்லாவற்றையும் ரசிகர்களிடம் சொல்லிவிடுவதுதான் இவருடைய இயல்பு.

மணிமேகலை கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹுசேன் லாரன்ஸ் மாஸ்டரிடம் டான்ஸராக பணியாற்றி வந்த நிலையில் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் ஹுசேன் டான்சராக டான்ஸ் ஆடி இருந்தார். அந்த டான்ஸை பார்த்து அவர் மீது இம்ப்ரஸ் ஆன மணிமேகலை அவரை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

மணிமேகலை மற்றும் ஹுசேன் இருவரும் வெவ்வேறு மதத்தவர் என்பதால் இவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டிலும் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. பிறகு ஹுசேன் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். மணிமேகலை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு குடும்பத்தின் உதவியும் இல்லாமல் தனியாக திருமண வாழ்க்கையை தொடங்கி இருந்த நிலையில் ஆரம்பத்தில் அதிகமாக கஷ்டப்பட்டதாகவும் ஆனால் எப்படியாவது எல்லார் முன்பும் சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியோடு தொடர்ந்து பணியாற்றி வந்த ஹுசேன் மற்றும் மணிமேகலை தங்களுடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமாக பண்ணை வீடு ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

television vijay tv manimegalai

அதுபோக சென்னையில் புதிய வீடு வாங்கி அதில் குடிபெயர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு அந்தப் பதிவில் சென்னையில் எங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய போது ஆரம்பத்தில் மாதத்திற்கு 10,000 வாடகை கொடுக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டோம். இன்று நாங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கி இருக்கிறோம் என்று பகிர்ந்து இருந்தனர். அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஒரு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் 2017 ஆம் ஆண்டு தாங்கள் வீட்டை எதிர்த்து தெருவில் எளிமையாக திருமணம் செய்தபோது எடுத்த வீடியோவையும், இப்போது தாங்கள் புதியதாக அதே தெருவில் வீடு வாங்கி வந்திருக்கும் வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.

television vijay tv manimegalai

கடந்த ஏழு வருடங்களில் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்திருக்கிறது. இதில் நான் உடைந்து போகும் நேரம் எல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்தது ரசிகர்கள் தான் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அதிகமான ரசிகர்கள் மணிமேகலையை பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+