அந்த நேரத்தில் இதுதான் நடந்தது.. யாருமே உதவிக்கு வரவில்லை... உருக்கமாக பேசிய மணிமேகலை
வி.ஜே மணிமேகலை தான் எதற்காக தன்னுடைய சுக துக்கங்களை வீடியோவில் பகிர்ந்து கொள்கிறேன் என்பதை பற்றி தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: விஜே மணிமேகலை தான் காதல் திருமணம் செய்த ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கஷ்டப்பட காலங்களில் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு உதவியாக மோட்டிவேஷன் கொடுத்த ரசிகர்களை பற்றி நெகிழ்ச்சியாக மணிமேகலை பாராட்டி இருக்கிறார்.
மணிமேகலை தன்னுடைய கணவர் தனக்கு எந்த அளவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார் என்றும் தன்னுடைய காதல் வாழ்க்கை ரகசியம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

காதல் திருமணம்
தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே ஒரு சிலர் முகம் தான் டக்கென்று நினைவிற்கு வரும் அந்த வகையில் மணிமேகலையும் ஒருவர். மணிமேகலை ஆரம்ப காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவருடைய காதல் கணவருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நட்பாக பழகி பிறகு காதலித்து திடீரென திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருடைய வீட்டிலும் ஆரம்பத்தில் எந்த உதவியும் செய்யாமல் இவர்களை சேர்த்துக் கொள்ளாமல் தான் இருந்திருக்கின்றனர்.

வீட்டுக்காக போராட்டம்
அந்த நிலையில் மணிமேகலையும் அவருடைய கணவர் உசேன் இருவரும் தங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். அப்போது மணிமேகலை 30 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்ததாகவும், தான் வாங்கும் சம்பளத்தில் லோன் வாங்கி புதிய வீடு கட்டி விடலாம் என எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் மணிமேகலை ஒவ்வொரு இடத்திற்காக லோனுக்காக அலையும் போது அது எல்லாம் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. மணிமேகலை மீடியா துறையில் இருப்பதால் இது நிரந்தர வருமானம் கிடையாது என்று லோன் கிடைக்காது என்று கூறி விட்டார்களாம்.

ரசிகர்களின் ஆதரவு
ஆரம்ப காலகட்டத்தில் மணிமேகலையும் அவருடைய கணவரும் பல்வேறு சோதனைகள் சந்தித்து வந்தாலும் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொண்டதே கிடையாதாம். அதை நாங்கள் வெளியே சொன்னதும் கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு போட்டோ போஸ்ட் போட்டால் கூட எங்களுக்கு ஆறுதலாக அதிகமான ரசிகர்கள் கருத்து வெளியிடுவது பார்க்கும்போது எங்களுக்கே சந்தோஷமாக இருக்கும். நாங்கள் யூடியூப் தொடங்கிய காலகட்டத்தில் நாங்கள் வெளியிட்ட புகைப்படம் வீடியோகளுக்கு அதிகமான பாசிட்டிவ் கமாண்டுகள் கிடைக்கும். சொந்த பந்தங்கள், உறவுகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்காத நேரத்தில் கூட எங்களுக்கு ரசிகர்களின் பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே மாறி விட்டோம்.

ஆதரவால் கிடைத்த சந்தோஷம்
அதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக youtube மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் எங்களுடைய சின்ன சின்ன சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறோம். பலர் இவர்கள் பணத்திற்காக இப்படி செய்கிறார்கள் என்று கூறினாலும், நாங்கள் அதைப் பற்றி கண்டு கொள்வதே கிடையாது. யாருமே எங்களுக்கு உதவிக்கு வராமல் இருந்த நேரத்தில் ரசிகர்கள் கொடுத்த மோட்டிவேஷனலும் ஆதரவும் எங்களுக்கு பெரிய அளவில் பக்க பலமாக இருந்தது. இன்று நாங்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக கூட சிலர் வீடியோ வெளியிடுகிறார்கள் ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் வீடு தேடி அலைந்து கொண்டிருந்த காலங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது.

இந்த ஆறுதல் போதுமாம்
நாங்கள் பட்ட கஷ்டங்களை யாரும் பேசினதும் கிடையாது. யாரும் சப்போர்ட் செய்ததும் கிடையாது. ஆனால் இப்போது அதை குறித்து நாங்கள் யாரையும் குறை சொல்வதில்லை. ஆனால் எங்களுக்கு பக்க பலமாக இருந்து பாராட்டும் ரசிகர்களை மட்டும் நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் தான் எங்களுக்கு எல்லாம். அதனால் தான் எங்களுடைய சுக துக்கங்களை நாங்கள் அவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய காலில் வென்னீரை நான் ஊற்றிய போது கூட அதை வீடியோவாக வெளியிட்டிருந்தேன். அதற்கு தொடர்ந்து பலர் எனக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர். அக்கா எல்லாம் சரியாகிவிடும் என்று அதிகமானோர் கூறினார்கள். அந்த ஒரு ஆறுதல் எங்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது என்று மணிமேகலை பேசி இருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications