இந்தியாவை விட்டு அவசரமாக அமெரிக்கா கிளம்பிய "மணிமேகலை".. காரணம் இதுதானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: தொகுப்பாளர் மணிமேகலை தான் இந்தியாவை விட்டு அமெரிக்கா போவதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இத்தனை நாட்களாக இந்தியாவிற்குள் மட்டுமே தொகுப்பாளராக இருந்த மணிமேகலை தற்போது அமெரிக்காவிலும் தொகுப்பாளராக மாறப் போகிறாராம்.
இதுகுறித்து மணிமேகலை வெளியிட்ட பதிவுக்கு வாழ்த்துக்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது.

தொகுப்பாளராக அறிமுகமாகி பலருக்கும் பரிச்சயமான மணிமேகலை சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். தான் என்ன பொருள் வாங்கினாலும் சரி தன்னுடைய ரசிகர்களிடம் அதை சந்தோஷமாக கூறிவரும் மணிமேகலை. தான் கட்டி வரும் வீட்டைப் பற்றி அடிக்கடி பதிவு வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
தொகுப்பாளராகவே பார்த்து வந்த மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக அறிமுகமான பிறகு அவருக்கு ரசிகர்கள் பல மடங்கு அதிகமாகிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை செய்யும் செயல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஒரு சில நேரங்களில் இவர் செய்வது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
ஆனாலும் மணிமேகலை அதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை மீண்டும் தொகுப்பாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மணிமேகலை பல காதலர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைத்தளத்தில் அந்த அளவிற்கு அவர்களுடைய பதிவுகளுக்கு பாசிட்டிவ் கருத்துக்களும் லைக்குகளும் குவிகிறது. அடிக்கடி தன்னுடைய கணவரோடு வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தில் இவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் ஆக்டிவாக இருக்கும்படி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இதுவரைக்கும் தான் இந்தியாவிற்குள் மட்டுமே தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலும் தொகுப்பாளராக மாறப் போகிறேன். அதுவும் இன்னும் சற்று நேரத்தில் நான் அமெரிக்கா மணிமேகலையாக உங்களிடம் பேசுகிறேன் என்று இப்போது மணிமேகலை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications