வேலை இல்லை! வீட்டு லோன் பிரச்சனை.. தவித்த விஜே மணிமேகலை.. ஆனால் அவர் அம்மா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலமான மணிமேகலை சமீப காலமாக அதிகமான நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய யூ டியூப் சேனல் பக்கத்தில் புதியதாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு வேலையில்லாமல் தான் வீட்டு லோன் கட்டுவதற்கு கஷ்டப்படுவதாகவும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
அதுபோல மணிமேகலை அவருடைய கணவரை காதல் திருமணம் செய்திருந்தார் . அதனால் மணிமேகலையின் வீட்டில் இத்தனை நாட்களாக மணிமேகலையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த நிலையில் இப்போது மணிமேகலையை அவருடைய அம்மா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மணிமேகலையின் வீட்டிற்கு வந்த அவருடைய அம்மாவும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக விஜே மணிமேகலை இருந்து வருகிறார். 90ஸ்க்கு மட்டுமல்லாமல் இப்போது உள்ள 2k கிட்ஸ்களுக்கு கூட மணிமேகலை பேவரைட் தொகுப்பாளினி தான். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய அல்டிமேட் காமெடி நிகழ்ச்சிக்கு பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
அதோடு சமூக வலைதளத்திலும் மணிமேகலை ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய youtube சேனல் மூலமாகவே தனக்கு விஜய் டிவி தருவதை விட அதிகமான வருமானம் வருகிறது என்று ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் மணிமேகலை வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட அடிக்கடி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு வருவதை மணிமேகலை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் சொந்தமாக கட்டிக் கொண்டிருக்கும் வீடு, அவருடைய உறவினர்களோடு மணிமேகலை செய்யும் காமெடி போன்றவற்றையும் அந்த வீடியோவில் காணலாம். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பலருடைய மனதை கவர்ந்த மணிமேகலை கடந்த சீசனில் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அதோடு இனி நான் கோமாளியாக வரமாட்டேன் என்றும் சொல்லியிருந்தார் .
இந்த நிலையில் சில வாரங்கள் கழித்து தொகுப்பாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அதிகமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மணிமேகலை காண முடியவில்லை. இந்த நிலையில் இன்று அவர் தன்னுடைய youtube சேனலில் வெளியிட்ட வீடியோவில் அது குறித்து மறைமுகமாக சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது அவரும் அவருடைய கணவரும் அந்த வீடியோவில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது என்னுடைய வாழ்க்கையில் பல சோகமான பிரச்சனைகள் வந்தது. அது எனக்கு மட்டுமல்ல எல்லாருடைய வாழ்க்கையிலும் வருவது தான். எல்லோரும் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாது. எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அது சில நேரங்களில் நிறைவேறாமல் போகும், அதில் நிறைவேற்றுவதில் பல பிரச்சனைகள் வரும்.
அந்த மாதிரி தான் எனக்கும் கூட வந்தது. நானும் கல்யாணத்துக்கு பிறகு ஆரம்ப காலகட்டத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு அதற்கு பிறகு ஓடி ஓடி உழைத்து ஓரளவுக்கு வந்த நிலையில் தான் நாங்க இப்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். நான் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையுமே என்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறேன். அந்த மாதிரி இப்போது என்னுடைய சோகத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
அதாவது எனக்கு இப்போ கொஞ்ச நாட்களாகவே சரியாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. வாய்ப்புகள் இல்லை என்றால் வருமானம் இருக்காது. வருமானம் இல்லை என்றால் நம்மால் வீட்டு லோன் கட்ட முடியாது. சின்ன சின்ன செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் போய்விடும். அந்த மாதிரி தான் என்னுடைய நிலைமையும் இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய அம்மா எனக்கு துணையாக வந்திருக்கிறார். அதுபோல அவர் சில ஜோதிடர்களை பார்க்கச் சொன்னார்.
நானும் அது படி பார்த்ததால் என்னுடைய வாழ்க்கை இப்போ கொஞ்சம் மாறி இருக்கிறது என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதோடு மணிமேகலை காதல் திருமணம் செய்து கொண்டதால் இதுவரைக்கும் அவருடைய வீட்டில் மணிமேகலையின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தன் தம்பியோடு அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய அம்மாவும் மணிமேகலையை ஏற்றுக் கொண்டு அவரோடு அந்த வீடியோக்களில் பேசியிருக்கிறார்.

அதிலும் மணிமேகலையோடு சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்த மணிமேகலையின் அம்மா எனக்கு உன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு எனக்கு அம்பதாயிரம் ரூபாய்க்கு சேலை வேண்டும் என்று கேட்க, அதற்கு மணிமேகலை என் கல்யாணத்துக்கு நீ என்ன செய்தாய் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது காமெடியாக நடந்து இருந்தாலும் தன்னுடைய கல்யாணம் ரொம்ப போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்றது என்பதை மணிமேகலை அந்த நேரத்தில் தன்னுடைய முக எக்ஸ்பிரஷனில் காட்டி இருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications