CWCவில் இருந்து வெளியேற காரணமே இதுதானா? மணிமேகலை வெளியிட்ட போட்டோஸ்... குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தன்னுடைய சொந்த இடத்தில் தான் செய்யும் புது வேலையை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது.
நான்கு சீசன்களாக தொடர்ந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென இந்த சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய கிராமத்தில் தன்னுடைய சொந்த இடத்தில் புதிய வேலைகளை தொடங்கும் புகைப்படங்களை மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார்.

முன்னணி தொகுப்பாளர்
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி 90'ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கும் நன்கு பரிச்சயமான பிரபலமான விஜே மணிமேகலை ஆவார். அகிலமே ஆண்ட்ராய்டு மயம் ஆவதற்கு முன்பு, கேபிள் டிவி என்றாலே சன் டிவி தான் என்று மக்கள் நினைத்து இருந்த காலகட்டத்தில், தன் அழகாலும் வசீகரிக்கும் பேச்சாலும் சன் நெட்வொர்க் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரது மனதிலும் அவரது முகத்தை பதிய வைத்துவிட்டார் விஜே மணிமேகலை, இப்பொழுது இருக்கும் பல விஜேகளுக்கு இவர் இன்ஸ்பிரேஸ்னாக கூட இருந்திருக்கலாம்.

மறக்க முடியாத விருது
2016 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் மாண்புமிகு. ரோசய்யா அவர்கள் கையால் "சிறந்த தொகுப்பாளர்" விருதை பெருமளவிற்கு, சன் நெட்வொர்க் நிகழ்ச்சிகள் இவரது கேரியரில் முக்கிய பங்கு வகித்தது. 2019ஆம் ஆண்டு விஜய் டிவிக்கு வந்த இவர் மிஸ் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் தன் காதல் கணவருடன் கலந்துகொண்டு, ஒரு கலக்கு கலக்கினார். அப்பொழுதுதான் ரசிகர்கள் மணிமேகலையின் பேச்சுத்திறமை மட்டுமல்ல இன்னும் பல திறமையை பார்த்து ரசித்தனர், ஜோடியாக சிறப்பான பெர்பாமன்ஸை கொடுத்தாலும்,ரன்னர்-அப் ஆகவே வர முடிந்தது.இருப்பினும் இவர்களுடைய பெர்பாமன்ஸ் அனைவரிடமும் நல்ல பாராட்டைப் பெற்றது.

சொந்த உழைப்பு
இதை தொடர்ந்து விஜய் டிவியில் செட்டிலாகி விட்ட விஜே மணிமேகலை, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தனக்கிருக்கும் சமையல் திறமை மற்றும் டைமிங் காமெடி மூலம் செம ரீச் ஆகிவிட்டார். பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை,எந்த நிலையிலும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்று வெறியோடு ஓய்வில்லாமல் ஒர்க் பண்ணி கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட தம்பதியர்கள் தங்கள் சொந்த உழைப்பில் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருந்ததாக பகிர்ந்து இருந்தனர்.அதை பல்வேறு செலிபிரிட்டிகளும் இணையவாசிகளும் வாழ்த்தி.. இந்த போஸ்ட்டை ஷேர் செய்து இருந்தனர்.

புது முயற்சி
தன்னுடைய சொந்த ஊரில் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை வாங்கி விட்டோம் என்று சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலையும் அவருடைய கணவரும் சேர்ந்து வீடியோ வெளியிட்டிருந்தனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தன்னுடைய சொந்த இடத்தில் பராமரிப்பு வேலையை தொடங்கி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கிராமத்தில் செட்டில் ஆகி விடலாம் என்று தான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா? என்றும் அடுத்த முயற்சி விவசாயத்தில் தான் மணிமேகலை கவனத்தை செலுத்த போகிறாரா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications