அங்க மட்டும் நழுவ விட்ட விஜே ரம்யா.. "செம மச்சி".. லயித்து ரசிக்கும் ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புடவையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என கலக்கலாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் விஜே ரம்யா.

இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து நின்றாலும் எடுப்பாய் இடுப்பை காட்டி ரசிகர்களை அடடா என்று மூச்சு முட்ட வைத்துள்ளார் நடிகையாகவும் அசத்தி வரும் ரம்யா.

அவர் என்ன போட்டோ போட்டாலும் ஓடி வந்து உயிரைக் கொடுத்து கமெண்ட் போடுபவர்கள் நம்ம ரசிகர்கள். உசுப்பி விடும் விதமாக படத்தைப் போட்டால் சும்மா இருப்பார்களா.

சரண்யா தச்ச பிளவுஸ்

சரண்யா தச்ச பிளவுஸ்

சரண்யா பொன்வண்ணனை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார் ரம்யா. அதில், மேம் உங்க நடிப்புக்கு மட்டுமல்ல ஸ்டிச்சிங்குக்கும் நான் நான் ஃபேன் மட்டுமல்ல ஏசியும் நான்தான் என்று கலகலப்பாக போட்டுள்ளார். இந்த போஸ்ட் இன்ஸ்டாகிராமர்களிடையே செம வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் சரண்யா தைத்துக் கொடுத்த டிரஸ்ஸில்தான் அவர் இதில் காட்சி தருகிறார்.

தனி முத்திரை

தனி முத்திரை

சின்னத்திரையில் விஜே வாக தனி முத்திரை பதித்த விஜே ரம்யா தனது திறமையால் ஒரு சில படங்களில் நடித்தும் வந்தார். இதனிடையே இவருக்குத் திருமணமும் நடந்தது. திருமணத்திற்குப் பின்பும் நடிப்பதை தொடர்ந்தார். ஆனால் அதில் குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கவே, நடிப்பதற்காகவே திருமண வாழ்க்கையில் இருந்து விலகியதாக பேசப்படுகிறது.

இன்னும் ஃபிட்டாக இருக்கும் பிளவுஸ்

இன்னும் ஃபிட்டாக இருக்கும் பிளவுஸ்

இவர் ஒரு சிறந்த ஃபிட்னஸ் நிபுணர் மட்டுமின்றி வெயிட் லிப்ட்டர் என்பதும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் சரண்யா பொன்வண்ணனை புகழ்ந்து அவர் தைத்துக் கொடுத்த பிளவுசை குறிப்பிட்டு ஒரு போஸ்ட் போட்டுள்ளார் .அந்த போஸ்டில்தான் சரண்யாவைப் புகழ்ந்துள்ளார்.

மெயின்டனன்ஸ் நல்லாருக்கே

மெயின்டனன்ஸ் நல்லாருக்கே

ஆறு வருடங்களாக அவர் கேரியரில் பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்து வந்தாலும் ஒரே மாதிரியான பிட்னஸை எப்படி மெயின்டைன் பண்ணுகிறார் என்பதை ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர். விஜே ரம்யா தளபதி ஃபேன் என்பதாலோ என்னவோ குஷி படத்தில் வரும் விஜய்க்கு பிடித்தார் போல் சின்னதாக மெல்லிடையை காட்டி பிங்க் நிற சேலையில் இவர் போட்டுள்ள போஸ்ட் லைக்குகளை குவித்து வருகிறது.

தனிப் பாசம்தான்

தனிப் பாசம்தான்

சரண்யா பொன்வண்ணன் மீது இவருக்கு இருக்கும் பாசம் காரணமாகவோ என்னவோ, அவர் ஆறு வருடத்திற்கு முன்பு தைத்துக் கொடுத்த பிளவுஸின் அளவு மாறாமல் அப்படியே தனது உடலமைப்பை கச்சிதமாக வைத்துள்ளாரோ என்றும் கூட நினைக்கத் தோன்றுகிறது. இந்த போஸ்ட்டை பார்த்ததும் நம் இன்ஸ்டாகிராம் கமாண்டர்கள் வழக்கம்போல் இடுப்பை காண்பிக்காமல் இருக்க முடியலையா என்று கேட்டுக் கலாய்த்துள்ளனர்.

ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்

ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்

அத்தோடு நில்லாமல், இன்னும் கொஞ்சம் இறக்கி காட்டுங்க என்று ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளை வடித்து வருகின்றனர். தற்பொழுது நடக்கும் பல விஷயங்களை வைத்து அன்றே கணித்தார் சூர்யா அன்றே கணித்தார் கமல் என்று மீம்ஸ் வருவது போல் 6 வருடத்திற்குப் பிறகு வீஜே ரம்யா எப்படி இருப்பார் என்று அன்றே கணித்தார் சரண்யா பொன்வண்ணன் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+