தமிழும் சரஸ்வதியும் இனி புதிய வசு இவர்தான்.. வெளியான தகவல்கள்..அப்போ இதுதான் முக்கிய காரணமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிகை தர்ஷனா வசு கேரக்டரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து தர்ஷனா விலகப் போவதாக செய்திகள் வெளியானது.
அதைத்தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி புதிய வசுவாக விஜே சங்கீதா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் இடம் பிடித்திருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலின் வசு கேரக்டர் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒரே வீட்டில் வாக்கப்பட்ட இரண்டு மருமகள்கள் ஒற்றுமையாக சகோதரிகளாக இருப்பது, அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்களுக்கு எதிராக வரும் சூழ்ச்சிகளை முறியடிப்பது என்று வசு மற்றும் சரஸ்வதி இருவரும் பலருடைய ரோல் மாடலாக மாறி இருக்கின்றனர்.
அந்த வகையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் கேரக்டராக இருக்கும் வசுவாக நடித்து வந்த தர்ஷனா இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இவர் விலகுவதற்கு என்ன காரணம் என்று அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது குறித்து தர்ஷனா எந்த விளக்கமும் கொடுக்காமல் தனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி இருந்தார்.
அதோடு வசு கேரக்டர் நான் எதிர்பார்க்காத அளவில் ரசிகர்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியாவில்லை. அந்த அளவிற்கு நான் திகைத்துப் போகிறேன் என்று தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இனி இவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் இதுவரைக்கும் இவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் இருந்து இவருக்கு பதிலாக புதியதாக வீஜே சங்கீதா இந்த சீரியலில் வசுவாக அறிமுகமாக இருக்கிறார். விஜே சங்கீதா வேறு யாரும் இல்லை சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் வில்லியாக நடித்தவர்தான். அது மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் சீரியலின் மலர் டீச்சர் ஆகவும் பலருடைய மனதை கவர்ந்தவர் தான்.
விஜேவாக இருக்கும்போதே இவருடைய கண்ணக்குழி அழகு மற்றும் சிரிப்பு பார்த்து சொக்கி போன ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவருக்காக கமெண்ட்களையும், ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருவார்கள். இந்த நிலையில் மீண்டும் இவர் பாசிட்டிவ் கேரக்டரில் சீரியலில் அறிமுகமாவது இவருடைய ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.
இந்த நிலையில் இந்த சீரியலில் வசு கேரக்டரில் ஆரம்பத்தில் தர்ஷனா நடிப்பதற்காக ஒப்பந்தம் போட்டு தான் கலந்து கொண்டிருந்தாராம். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி அவர் வேறு ஒரு சேனலில் வேறு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிப்பதற்காக முதலில் விஜே சங்கீதாவிடம் பேசிய போது அவர் ரீப்ளேஸ்மென்ட் கேரக்டரில் நடிப்பதற்கு ரொம்பவே யோசித்தாராம். ஏற்கனவே ஒருவர் நடித்து அந்த கேரக்டரில் அவர் செட் ஆகியிருப்பார். அதில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா என்று யோசித்தாராம். பிறகு நண்பர்களிடம் விசாரித்த பிறகு இது ஒரு பாசிட்டிவான கேரக்டர் என்று சொன்ன பிறகுதான் இவர் இந்த சீரியலில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!











Click it and Unblock the Notifications