விஜய் டிவி "இதை" விடாது போலயே.. பாரதிகண்ணம்மாவில் அடுத்த சீமந்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து இப்போ விஜய் டிவி பாரதிகண்ணம்மாவை கையில் எடுத்திருக்கிறது. டிஆர்பி கூட்டுவதற்காக ஃபங்ஷனை தொடங்கிவிட்டார்கள்.

அஞ்சலியின் வளகாப்பு பங்ஷனில் வெண்பாவும், பாரதியும் போட்ட ஆட்டம் தான் வேற லெவலாக பரவி வருகிறது.

இந்த வாரம் விட்ட இடத்தை அடுத்த வாரம் பிடித்துவிடுவார்கள் போலயே. அதுக்காகவே திட்டமிட்டு எபிசோடுகளையும் மாற்றி விட்டார்களா என ரசிகர்கள் கலாய்க்க தவறவில்லை.

அட அது கூட அழகுதான்

அட அது கூட அழகுதான்

போன வாரம் தான் பாரதிகண்ணம்மா சீரியல் அழகாக இருந்தது. பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் குழந்தைகளோடு இருந்ததை பார்த்து இந்த சீரியலின் ரசிகர்கள் இந்த மாதிரியே கதை இருந்துவிடக் கூடாதா!! எப்போதுதான் இவர்கள் ஒன்று சேர்வார்கள்?? என்றெல்லாம் கூறிவந்தார்கள். ஏற்கனவே பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல ரசிகர்கள் சீக்கிரமாக அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து இருவரும் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வரும் நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் போனவார எபிசோடுகள் இருந்தது.

லட்சுமியின் அம்மாவ கண்டுபிடிச்சாச்சா??

லட்சுமியின் அம்மாவ கண்டுபிடிச்சாச்சா??

இந்த நிலையில் இன்று ஒளிபரப்பப்படும் புது புரோமோவில் கண்ணம்மாவின் குழந்தைதான் லட்சுமி என்பதை பாரதி தெரிந்து கொள்வாரா?? மாட்டாரா?? என்று ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் லட்சுமியின் ஸ்கூல் டைரியில் கண்ணம்மாவின் போட்டோவும், அம்மா என்று இருக்கும் இடத்தில் கண்ணம்மாவின் பெயரையும் பாரதி பார்த்துவிட இனி என்ன நடக்குமோ!! என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த எபிசோடுகள் எப்போது வரும் என்று அனைவரும் காத்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோக்கள் பரவிவருகிறது.

இனி குதூகலம்தான்

இனி குதூகலம்தான்

அது அஞ்சலியின் வளைகாப்பு போட்டோஸ்கள் தான். இந்த போட்டோஸ் களை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் அஞ்சலியின் வளைகாப்பில் கர்ப்பமாக இருக்கும் வெண்பா உடன் பாரதி போட்டோக்களை எடுத்து இருக்கிறாரே என்று ஷாக் ஆகி இருக்கின்றனர். ஆனால் இது எல்லாம் சீரியலையும் தாண்டி ஒரு ஜாலியான போட்டோஸ்கள் தான். அதுமட்டுமல்லாமல் வெண்பா வாக நடிக்கும் பரீனாவும் அஞ்சலியாக நடிக்கும் காவியா அறிவுமணியும் செம ஆட்டம் போட்டு இருக்கின்றனர். இதில் உண்மையாக கர்ப்பமாக இருக்கும் போது பரீனா போட்ட ஆட்டம் தான் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

சரி செய்வதற்கு தான் இப்படியா

சரி செய்வதற்கு தான் இப்படியா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த வாரம் டிஆர்பி யில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. அதனை சரிசெய்வதற்காக கதையைப் பெரும் திருப்புமுனைகளோடும் விருவிருப்பாக பாரதிகண்ணம்மா கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. விருவிருப்புக்கு பஞ்சமில்லாமல் அடுத்த வாரம் எபிசோடுகள் இருக்கப்போகிறது. ஆனால் இந்த வளைகாப்பு பங்க்ஷன் எபிசோடு மட்டும் எப்போது ஒளிபரப்பப்பட போகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் அதற்குள் லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான் என்பதை பாரதி நிரூபித்து விடுவாரா இல்லையா என்பது சஸ்பென்ஸ் நிறைந்து இருக்கின்றது.

டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துரலாமா

டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துரலாமா

இப்படியே ஒவ்வொரு சஸ்பென்சாக உடைத்து சீக்கிரத்தில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்த்து வைத்து விடுங்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக கூறி வருகின்றனர். எப்படியும் பெண் வென்பாவாக நடிக்கும் பரீனாவுக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் குழந்தை பிறந்துவிடும், அதற்கு பிறகு இவர் கொஞ்சநாள் சீரியலில் நடிக்க மாட்டார். அந்த காலகட்டத்தில் சேர்த்து வைத்து விடுங்கள். வெண்பா திரும்பி வந்தால் மீண்டும் பிரச்சினையை கிளப்பி விடுவார், என்று கண்ணம்மாவின் தீவிரமான ரசிகர்கள் புதிய கதையை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+