மனோஜூக்கு கிடைக்காத அதிர்ஷ்டம்.. பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்".. வாய்விட்டு சொன்ன கொடுமை: பிரபலம்
சென்னை: பாதிராஜாவின் மகன் என்பது, மனோஜ்ஜின் வாழ்க்கைக்கு பெரும் உபயோகமாக இருந்தது. ஆனால், அதேதான் அவரது தோல்விக்கும் காரணமாகிவிட்டது.. சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மனோஜ் போராடியது அதிகம்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
King 24X7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. பொதுவாக, எந்த துறையில் சென்றால், உயர்ந்த இடத்தை அடைவார்கள் என்பதை நினைத்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள்..

ஹீரோவுக்குரிய முகம் இல்லை
"கல்லுக்குள் ஈரம்" படத்தில் பாரதிராஜா இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.. அந்த படம் தோல்வியாகிவிட்டது.. அப்போது பாரதிராஜாவிடம் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேட்டதற்கு, "கதாநாயகனுக்குரிய முகம் எனக்கு இல்லை" என்று வெளிப்படையாகவே சொன்னார்.. அதற்குபிறகு அவர் ஹீரோவாகவும் நடிக்கவில்லை..
அதேபோல, பாரதிராஜாவின் கதாநாயகர்கள் யாருமே முன்னுக்கு வரமாட்டார்கள்.. ஹீரோயின்கள் அனைவருமே உச்சக்கட்ட புகழுக்கு சென்றுவிட்டார்கள்.. ஆனால் ஹீரோக்கள் வளர மாட்டார்கள். இதில் பாண்டியன் போல விதிவிலக்கு உண்டு. கார்த்திக் ஒரு எல்லைக்கு பிறகு காணவில்லை.
அப்பா மகன் கருத்து வேறுபாடா
அந்தவகையில் தாஜ்மஹால் படத்தில் திணிக்கப்பட்டுதான் மனோஜ் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.. தன் அப்பா விருப்பத்துக்காக சினிமாவில் நடிக்க வந்ததாக மனோஜே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இப்படி குறிப்பிட்ட தோல்விகளை, பிள்ளைகளுக்கு பெற்றோர்களே தருகிறார்கள்..
மனோஜ், பாரதிராஜா இடையே குழப்பங்கள் இருப்பதுபோல் வாய்ப்பு தெரியவில்லை.. காரணம், அவருக்கு இருப்பது ஒரே மகன்தான்,.. அப்பாவுக்கும், மகனுக்கும் எந்த கருத்து வேற்றுமை கிடையாது.. தனிக்குடித்தனமாக சேத்துப்பட்டில் இருந்துள்ளார் மனோஜ்.. இது அவரது பிரைவசி சம்பந்தப்பட்டது..
புத்திர சோகம் மட்டும் வரவேக்கூடாது
புத்திர சோகம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.. வயது மூப்பில் மனைவி, புத்திரர் இந்த 2 மரணங்களும் நடக்கக்கூடாது என்பார்கள்.. இயல்பாகவே ஆண்கள் பெண்களைவிட மனதளவில் பலவீனமானர்கள். அதிலும், வயது மூப்பில் ஆண்கள் உடலளவிலும் பலவீனமடைந்துவிடுகிறார்கள்.. அந்த நேரத்தில் மனைவி, பிள்ளைகளை பறிகொடுப்பது சொல்ல முடியாத வேதனை.
அதேபோல, ஒருவர் உயிருடன் இருக்கும்போது, அவரை இந்த சினிமா துறையில் இருப்பவர்கள் கண்டுக்கொள்ளவதே இல்லை.. நான் விஜயகாந்த் மரணத்திலேயே கவனித்தேன்.. விஜயகாந்த்துக்கும் சினிமாவில் யாருமே துணையாக இல்லை.. விஜயகாந்த் வீட்டில் போய் சாப்பிட்டவங்க முதற்கொண்டு, யாருமே அவரை கடைசி காலத்தில் கண்டுக்கல.. அவர்இறந்தும்கூட நிறைய பேர் வெளியூர்களில் இருந்துக்கொண்டு, இரங்கல் செய்தி போட்டதையும் பார்த்தோம்..
நேரம் சரியில்லை
விஜயகாந்த் என்றில்லை, சினிமாவில் யார் இறந்தாலும், இறந்தபிறகுதான் சம்பிரதாய வார்த்தைகளை சொல்கிறார்கள்., மனோஜ் ஏற்கனவே பேட்டிகளில், "ஒரு பெரிய இயக்குனர் மகன், நான் ஏறாத கம்பெனி இல்லை" என்று சொல்வதிலேயே அவரது ஒட்டுமொத்த வலியையும் புரிந்து கொள்ள முடியும்.. சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மனோஜ் போராடியது அதிகம்..
பாதிராஜாவின் மகன் என்பதுதான் மனோஜ்ஜின் வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்தது. ஆனால், அதேதான் அவரது தோல்விக்கும் காரணமாகிவிட்டது.. உழைப்பு, திறமை, நேரம், அதிர்ஷ்டம் இது எல்லாமே சினிமாவில் இருக்க வேண்டும் .. மனோஜ் கண்டிப்பாக உழைத்தார்.. கண்டிப்பாக திறமைசாலி.. ஆனால், நேரம் அமையவில்லை.. அதிர்ஷ்டமும் கிடைக்கல.
பிரபல எழுத்தாளர் விகே சுந்தர் ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், " பாரதிராஜாவின் சமகாலத்தில், அவர்களுடன் இருந்த ஆட்கள் யாருமே மனோஜ்க்கு நல்ல நண்பர்கள். ஆனால், அவர்கள் யாருமே அஞ்சலி செலுத்த வரல.. நேற்று அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே பாரதிராஜாவுக்காக வந்தவர்களள்தானே தவிர, மனோஜூக்காக வரல. பாரதிராஜாவின் நண்பர்களுக்கு இருக்கும் அதிர்ச்சி, மனோஜ் நண்பர்களுக்கும் இருக்கணும்தானே? ஆனால் 48 வயதாக ஒன்றாக பழகியவர்கள், நண்பருக்காக வரவில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications