சூர்யா- ஜோதிகா மீண்டும் கல்யாணம் செய்தது இதற்கு தானா? அழகான காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக சினிமா வாழ்க்கையில் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் நீண்ட நாட்கள் மனம் ஒத்த தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் சூர்யா- ஜோதிகா தம்பதியும் உண்டு. இவர்கள் 20 வருடம் கழித்து இப்போது கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்திருக்கும் வீடியோ தான் நேற்றிலிருந்து சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சூர்யா ஜோதிகா திருமணம்

கடந்த செப்டம்பர் 11, 2006 இல் திருமணம் செய்து கொண்ட சூர்யா ஜோதிகா 20 வருஷங்களை கடந்த பிறகு தங்களுடைய வாழ்க்கையில் மீண்டும் திருமண உறுதிமொழிகளை புதுப்பித்து இருக்கிறார்கள். இந்த முறை தங்களுடைய பிள்ளைகள் முன்னிலையில், இந்த நிகழ்வின் வீடியோவும் புகைப்படங்களும் கவனம் பெற்று வருகிறது.

எதற்காக மீண்டும் கல்யாணம்

சூர்யா ஜோதிகாவின் இந்த நிகழ்வை வெறுமனே இன்னொரு திருமண விழாவாக பார்க்க முடியாது. அவர்களே இதற்கு The Sequel என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது 20 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த அதே வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம். ஜோதிகா வெள்ளை நிற திருமண உடையில் தேவாலயத்திற்குள் வர, சூர்யா அவரை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும் வீடியோவில் இருக்கிறது. இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டார்கள். மகள் திவ்யா, மகன் தேவ் உள்ளிட்ட குடும்பத்தினரும் அந்த தருணத்தில் இருந்திருக்கின்றனர்.

Surya Jyothika

சூர்யா ஜோதிகா பதிவு

இந்த நிகழ்ச்சியில் கார்த்தியும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வை பற்றி சூர்யா ஜோதிகா வெளியிட்ட பதிவுதான் இன்னும் கவனம் பெறுகிறது. 20 Years love and war என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இது ஒரு சரியான திருமணத்தை கொண்டாடும் நிகழ்ச்சி இல்லை என்றும், வாழ்க்கையில் வரும் Adjustment, Understanding, Sacrifices, Inperfections எல்லாவற்றையும் கடந்து வந்த 20 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணம் என்றும் பகிர்ந்திருக்கிறார்கள்.

மீண்டும் கல்யாணம்

இதுதான் இந்த நிகழ்வை மற்ற திருமண நாள் கொண்டாட்டங்களில் இருந்து வேறுபடுத்தி உள்ளது. எங்களுக்குள் சண்டை வராது எப்போதும் சந்தோஷம்தான் என்று காட்டுவதற்கு பதிலாக சண்டையும் இருக்கும், சமாதானமும் இருக்கும், புரிதலும் வரும், அதையெல்லாம் தாண்டி தான் 20 வருட வாழ்க்கை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜோதிகாவின் உறுதிமொழிகளிலும் இதே விஷயம் இருக்கிறது. தன்னுடைய கணவருடன் இருக்கும் காதலை மட்டுமல்லாமல் அவர்களுடைய நட்பையும் குழந்தைகளையும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Surya Jyothika

காதல் கல்யாணத்தோடு முடிக்க கூடாதுன்னு சூர்யா ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். சில வாரங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் நீண்ட கால உறவு பற்றி பேசிய சூர்யா திருமணத்திற்கு பிறகு தினமும் காதலிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருந்தார். 20 வருட திருமண வாழ்க்கையை தாண்டி அவர் சொன்ன அந்த வார்த்தைகளுக்கு பிறகு இப்போது ஜோதிகாவுடன் மீண்டும் உறுதிமொழி எடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

சினிமாவில் காதல் காட்சியில் எத்தனையோ பேர் நடிப்பார்கள். ஆனால் 20 வருடம் கழித்து தங்களுடைய குழந்தைகள் முன்னால் மீண்டும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்வது கொள்வது வேறு மாதிரியான தருணம். அதனால் தான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+