சூர்யாவின் "கருப்பு" தவறு.. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஒரே போடு.. கடைசியில் முட்டாளாக்கப்பட்டது?
சென்னை: இன்று திறமையுள்ளவர்களை தேடித்தேடி கண்டுபிடித்து, சினிமாவில் வாய்ப்பு தரும் அளவுக்கு சோஷியல் மீடியா வளர்ந்துவிட்டது. இந்த சோஷியல் மீடியா என்ற பிளாட்ஃபார்ம்களை திறமைசாலிகளும் சரியாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால், இது எல்லை மீறி செல்லும்போதுதான் சிக்கல் வந்துவிடுகிறது.
விஜய் ஆண்டனி சமீபத்தில் தன்னுடைய 50வது பிறந்தநாள் விழாவை கொண்டாடியபோது, துப்பாக்கியால் சுட்டு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார்.. பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு பதிலாக பிரியாணி வெட்டினார்.. ஒரு ஆமை பொம்மையை மேடைக்கு எடுத்து வந்து, மாலையிட்டு மரியாதை செய்தார். மார்கன் படம் வெற்றி பெற்றுள்ளதால், இனி ஆமையை அதிர்ஷ்டம் இல்லாதது என்று யாரும் சொல்லாதீர்கள் என்றும் விஜய் ஆண்டனி பேசியிருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "விஜய் ஆண்டனி இவ்வாறு செய்திருப்பதன் நோக்கம் சரியானது என்றாலும், அது பிறரது மனதை புண்படுத்திவிடும். தன்னுடைய கருத்துக்களை கொள்கையாக சொல்லலாம். அல்லது படத்தில் காட்சியாகவும் வைக்கலாம்..
அதைவிட்டுவிட்டு, ஒரு பொதுவிழாவில், தனிநபர் விருப்பத்தை திணிப்பதும், அதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதும் தவறு..
கஜினி சூர்யா - வாட்டர் மெலன்
நடிகர் சூர்யா கஜினி படத்தில் வாட்டர் மெலன் சாப்பிட்டதை பார்த்து, ஒருவர் அதை காப்பியடித்து நடித்தார்.. இப்போது அவர் வாட்டர் மெலன் ஸ்டாராகவே மாறிவிட்டார்.. கருப்பு படத்தில் சூர்யா, மீண்டும் தர்பூசணியை சாப்பிடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. ஆனால், அந்த வாட்டர் மெலன் ஸ்டார், தன்னை பார்த்துதான் சூர்யா காப்பியடித்துள்ளார் என்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம்?
இப்படியான அபத்தத்தை ஒருவர் செய்கிறார் என்றால், மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக செய்யக்கூடிய வேலைகள்தான் இதெல்லாம்.. அப்படித்தான் கூல் சுரேஷூம் சில விஷயங்களை செய்து வருகிறார். இதுபோன்றவர்களுடன், விஜய் ஆண்டனியும் இணைந்துவிடக்கூடாது என்பதே நம்முடைய கோரிக்கை" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இன்புளூயன்சர்கள்
இந்நிலையில், Fime Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "சோஷியல் மீடியா பிளாட்பாரம் இல்லாத காலக்கட்டங்களில், சினிமாவில் வாய்ப்பு தேடுவோர், தங்களை பல கெட்டப்களில் போட்டோ எடுத்து ஆல்பம் வைத்து கொள்வார்கள்.. அந்த ஆல்பத்தை தந்துதான் சினிமா வாய்ப்பு கேட்பார்கள்..
ஆனால், இன்று திறமையுள்ளவர்களையே தேடி கண்டுபிடித்து, வாய்ப்பு தரும் அளவுக்கு சோஷியல் மீடியா வளர்ந்துவிட்டது. இந்த சோஷியல் மீடியா என்ற பிளாட்ஃபார்ம்களை திறமைசாலிகளும் சரியாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால், இது எல்லை மீறி செல்லும்போதுதான் சிக்கல் வந்துவிடுகிறது.
கோமாளியாக்கிட்டாரு
ஒரு இன்புளூயன்சர், தன்னை முழுவதுமாக கோமாளி என்று நினைத்து செய்துவிட்டு, கடைசியில் பார்ப்பவர்களைதான் கோமாளியாக்கிட்டாரு. "நீங்கள் எறியும் கற்களை வைத்து, அவர் வீடு கட்டி கொண்டிருக்கிறார்" என்று அவரை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன்..
தன்னை அசிங்கமாக கிண்டல் செய்யப்படுவதையும், கேலி செய்யப்படுவதையும்கூட, தன்னுடைய புகழுக்காக அவைகளை அவர் பயன்படுத்தி கொண்டுவருகிறார். அடுத்தடுத்த கட்டத்துக்கும் அவர் நகர்ந்து வருகிறார்.
ஒருதிறமையும் இல்லாமல் ,தனக்கு திறமை இருப்பதாக காட்டிக் கொள்வதும் ஒருவகையான திறமைதான்.. சோஷியல் மீடியாவில் வேறு எந்த கன்டென்ட்டும் இல்லாததால், இதுபோன்றவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். சமூக அக்கறையுள்ள நிறுவனங்களும், கம்பெனிகளும் இதுபோன்ற இன்புளூயன்சர்களை பயன்படுத்துகிறார்கள்..
கருப்பு படத்தில் தவறான விஷயம்
இந்த இன்புளூயன்சர்கள் செய்வதை பார்த்து, சினிமாவில் நடிகர்கள் காட்சிகளை வைத்தால், சினிமாவில் கற்பனை வறட்சி அதிகமாக இருப்பதாகவே அர்த்தம்.. புதிதாக சீனை சினிமாக்காரதர்கள்தான் உருவாக்க வேண்டும்..
ஆர்ஜே பாலாஜியின் கருப்பு படத்தில், அப்படியொரு சீனை வைத்து, சோஷியல் மீடியாவில் அந்த இன்புளூயன்சரை ஹைப் செய்துவிட்டார்கள்.. "சினிமாவே என்னை பார்த்துதான் ஃபாலோ செய்கிறது" என்று சொல்லும் நிலைமைக்கு அவர் சென்றுவிட்டார்.. இது கருப்பு பட டீம் செய்தது தவறான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications