Pandian stores serial: 500 எபிசோட் ஆச்சு.. ஒரு சண்டையைக் காணோம்.. என்னா குடும்பம் சார்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 500 வது கொண்டாடி முடிச்சுட்டாங்க.
குடும்பத்துக்குள்ள இன்னும் ஒரு அடிதடி இல்லை... ஒரு சண்டை இல்லை. ஒரே அமைதிப் பூங்காவா இருக்குங்க.
அண்ணண் தம்பி. வாழ வந்த மருமகளுங்க ஒத்துமையா இருக்காங்க..இதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலோட ஹைலைட்.

கடைக்குட்டி கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டியாக நடிக்கும் கண்ணனுக்கு இதுவரை கல்லூரி போகும் கதாபாத்திரம்தான். 500 வது எபிசோட் கொண்டாட்டத்தில் கடைக்குட்டி கண்ணன் பற்றி பேசிய மூத்த அண்ணன் பாண்டியன் ஷூட்டிங் போது கேர்ள்ஸ் ரூமில்தான் இவன் எப்போதும் இருப்பான் என்று கூறினார்.

ஏசி கம்மியாக
கேர்ள்ஸ் ரூமில் ஏசி கம்மியாக இருக்கும் அதனால் அங்கே போயி தூங்குவேன்னு சொல்லிய கண்ணனை நம்புவார் யாரும் இல்லை... பாய்ஸ் ரூமில் எல்லாரும் பாய்ஸா இருப்பாங்க. பாய்ஸ் ரூமில் கண்ணாடி கூட பார்க்க மாட்டான். கண்ணாடியில் கூட அவன் தெரிவான்னு என்று கலாய்த்தனர்.

எப்போ ஜோடி
காரைக்குடியில் ஷூட்டிங் நடந்துகிட்டு இருந்துச்சு.. அப்போ புரடியூசர் வந்து.. என்னப்பா சாப்பிட்டியான்னு கேட்டாரு. அவருகிட்டே போயிட்டான்.. சார்...60 வது எபிசோட் ஆயிருச்சு...பார்த்து டக்குன்னு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டான்னு சொன்னார் மூத்த அண்ணன்.

500 எபிசோட்
ஆனால், கடந்த வரம் 500 வது எபிசோடும் முடிஞ்சு போச்சு.. இன்னும் கண்ணனுக்கு ஒரு ஜோடி அமைஞ்ச பாடில்லை. இன்னும் கல்லூரி கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருக்கான். இப்போ ஆண்டுவிழா கொண்டாட போறாங்களாம் அதுக்கு டான்ஸ் ஆடப் போறதா கண்ணன் சொல்லிக்கிட்டு இருக்கான்,. பாவம் எப்போதுதான் அவனுக்கு ஒரு ஜோடி அமைச்சு கொடுக்கப் போறாங்களோ தெரியலை.












Click it and Unblock the Notifications