Kanmani Serial: சின்னவர்னா ஒரு கெத்து வேணாமா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வியை கொண்டு வந்தாச்சு...அவ சின்னவரையே நினைச்சுட்டு இருக்கான்றதையும் காண்பிச்சாச்சு..
கதையில அவ சின்னவருக்கு வேணுமே... அதனால சவுந்தர்யாவுக்கு ஒரு காரணமும் இல்லாம விபத்து.. அபார்ஷன் ஆனதால் இனி குழந்தை பிறக்கவே சான்ஸ் இல்லேன்னு சொல்லி..
எப்படியும் முத்துச்செல்வியை சின்னவருக்கு ரெண்டாம் தாரமா கதையில் கொண்டு வர போறீங்க. அதை நியாயப்படுத்த சவுந்தர்யாவுக்கு இனி குழந்தை பொறக்காது...

சின்ன கவுண்டர் ரேஞ்சுக்கு
சின்னவரை அந்த ஊரில் சின்ன கவுண்டர் ரேஞ்சுக்கு ஆரம்பத்தில் காண்பிச்சீங்க. சவுந்தர்யா மேல சின்னவர் ஆசைப்பட்டார். அப்புறம் சவுந்தர்யா இல்லை என்றானது. பிறகு முத்துச்செல்வி சின்னவர் மேல ஆசைப்பட்டது சின்ன கவுண்டர் சீன் மாதிரியே அமைஞ்சது.

சின்னவர்னா ஒரு கெத்து
சரி இப்போதுதான் முத்துச்செல்வி இல்லை என்றாகிப்போச்சே.. அவளை இன்னும் எதற்கு சின்னவரை நினைச்சே வாழ வைக்கறீங்க. சின்னவர்னா ஒரு கெத்து வேணாமா? அவரை அதே கெத்தோடு வாழ வைக்கலாமே... அதுக்குள்ளே அவருக்கு குழந்தை இல்லேன்னு காண்பிச்சு, முத்துச்செல்வி அவர் நினைவா வாழறத காண்பிச்சு கதையை எப்படி கொண்டு போகப் போறீங்களோ...

அந்த ஊரில் சின்னவராவே
சின்னவர் மானம் மதிப்பில் அந்த ஊரில் சின்னவராவே வாழ்ந்து காண்பிப்பதுதான் கதைக்கு நன்றாக இருக்கும். வழக்கம் போல குழந்தை இல்லை. கதையில் முத்துச்செல்வியை கொண்டு வந்துவிட்டோம் என்று ரெண்டு பொண்டாட்டி கதையை கொண்டு வந்து விட்டால் சின்ன கவுண்டரின் பாணியில் இருந்த சின்னவரின் கேரக்டர் கெட்டப் போய்விடும்.

பொண்டாட்டி நியாயம்
அதோடு ரெண்டு பொண்டாட்டி என்பதை குழந்தை இன்மை காரணம் காண்பித்து நியாயம் கற்பிக்க வேண்டாம். அப்போதுதான் சின்னவரின் கதாபாத்திரம் எடுபடும். ஆரம்பத்தில் சின்னவரின் கதாபாத்திரத்தை கண்ணியமாக கொண்டு சென்றதை நினைவில் கொள்க. இதுவரை முத்துச்செல்வி சின்னவரின் நினைவில் வாழ்கிறாள் என்று நீங்கள் காண்பித்து வருவதே தவறு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications