நீங்க என்ன “அந்த” ஜாதியா..? நடிகை கஸ்தூரி இடம் கேள்வி கேட்ட நபர் .. வெளிப்படையாக கொடுத்த பதிலடி
சென்னை: நடிகை கஸ்தூரி சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு ஒரு நபர் நடிகை கஸ்தூரியிடம் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பெயரை குறிப்பிட்டு நீங்க அதை சார்ந்தவரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கஸ்தூரி பதில் கமாண்ட் கொடுத்து இருக்கிறார். இது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
பிறகு சில வருடங்களாக பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த கஸ்தூரி ஒரு சில திரைப்படங்களில் குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதற்குப் பிறகு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால் அடிக்கடி சில சர்ச்சையான கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறார். நடிகர்கள் மட்டுமல்லாமல் சில அரசியல் பிரமுகர்கள் பற்றியும் அடிக்கடி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து சமீபத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் "அஜித்னா யாரு? கேக்க மாட்டாங்களா பின்னே? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல் யாரும் தூக்கி விடாம யாரையும் தடுக்காமல் சொந்த முயற்சியிலே மேல வந்தவரு.. அவரை எல்லாம் எப்படி தெரியும் என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பதிவிற்கு கீழே ரசிகர் ஒருவர்," அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று பதிவு கொடுத்திருக்கிறார். அதற்கு நடிகை கஸ்தூரி," ஜாதி பார்க்கும்போது உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமைக் கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா..?" என்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பதில் அதிகமான லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications