நடிகை திவ்யாவுக்கு மகிழ்ச்சியான வளைகாப்பு...கணவர் அர்ணாவ் வெளியிட்ட குதர்க்கமான பதிவு
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதரின் வளைக்காப்பை அவருடன் பணிபுரியும் சின்னத்திரை நடிகர்கள் பலர் எளிமையான முறையில் நடத்தி இருக்கின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதரின் கணவரான அர்ணாவ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு யோசிக்க வைத்திருக்கிறது.

அறிமுகமும் திருமணமும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலின் கதாநாயகனாக இருக்கும் அதனால் சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் கதாநாயகியை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அதற்கு பிறகு காதலித்து பல வருடங்கள் கழித்து திருமணம் ஆகிய நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கிறார்.

மாறி மாறி குற்றச்சாட்டு
சின்னத்திரை தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த ஆரம்பத்தில் இருந்தே சிறு சிறு சண்டைகள் வந்த பொழுதிலும் அது பெரிதாகாமல் இருந்தது. ஆனால் தற்போது செல்லம்மா சீரியலில் நடிக்கும் நடிகையோடு அர்ணாவ் நெருங்கி பழகி வருவதால் அதன் காரணமாக திவ்யா மற்றும் அர்ணாவ் இடையே அதிகமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைகள் நடந்து வருகிறது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று திவ்யா ஸ்ரீதர் குற்றசாட்டுகளை சுமத்தி வந்தார். தன் தரப்பிலும் நியாயம் இருக்கிறது நான் அப்படியெல்லாம் நடந்து கொள்ளவில்லை என்று செய்தி சேனல்களில் பேசி வந்தார் இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி கொண்டிருந்தனர்.

ஐந்தாவது மாதம் தொடக்கம்
இந்த நிலையில் திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணாவ் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அவரவர்கள் வேலையை பார்த்து வருகின்றனர் .சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக பல போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் திவ்யா தனக்கு ஐந்தாவது மாதம் தொடங்கி இருக்கிறது என்றும் அதில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அர்ணாவ் அதுபோல மறுநாள் செல்லமா சிரியலில் அவரோடு நடிக்கும் குழந்தையோடு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.

அர்ணாவ் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சேர்ந்து திவ்யாவிற்கு ஐந்தாவது மாத வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். அதில் அர்ணாவ் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய வளைகாப்பு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பகிர்ந்து இருந்தார் .அதே நேரத்தில் அர்ணாவ் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ,"உனக்காக வேறு யாரும் எதுவும் செய்யப் போவதில்லை என்பதால் நீங்களே உங்களை ஊக்கப்படுத்தி கொள்ளுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார் .இந்த பதிவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல இவர்களுடைய பிரச்சனையை மறந்து மீண்டும் குழந்தைக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்று பலரும் அன்பாக அறிவுரை கூறி வருகின்றனர்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications