ஹமாரா தேஷ்... பிரியங்கா "தேஷ் பாண்டே".. எங்க பசங்களை டம்மி செய்து.. "மணிசத்தம்" வரும்.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிமேகலை வெளியிட்டிருந்த அறிக்கையானது, இன்று சின்னத்திரையில் புகைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாகவே பிரியங்கா மீதான குற்றச்சாட்டை பிரபலங்கள் ஒவ்வொருவராக பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதியும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, அதிலிருந்து விலகுவதாக கூறி, இதற்கான சில காரணங்களையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

manimegalai priyanka

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே இதற்கெல்லாம் காரணம் என்று மணிமேகலை சொல்லியிருந்த நிலையில், அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று இணையவாசிகள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

உமாபதி: அந்தவகையில், AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். மீடூ விவகாரம் முதல், ஆரம்ப கால விஜய் டிவி எப்படி இருந்தது என்பது வரை விரிவாகவே சொல்லியிருக்கிறார். அதில் பிரியங்காவையும் கடுமையாக சாடியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"இந்த சேனல்ல போய் ஆங்கர் பண்ணினா சீக்கிரம் ரீச்சாயிடலாம்.. ரீச் ஆயிட்டோம்ன்னா வாழ்க்கையில் செட்டில் ஆயிடலாம்ன்னு நினைக்கிறாங்க.. பல நியூஸ் சேனல்ல இருக்கிறவருக்கும் இந்த ஆசை உண்டு. அதனால் நிறைய பேர் இந்த சேனலை விரும்புவாங்க.

ஆங்கர்கள்: அதனால அங்கு தலைமை பொறுப்பில் இருக்கிறவங்களுக்கும், டீமில் இருக்கிறவர்களுக்கும், அவங்களுக்கு தேவையான ஆங்கர்களை செலக்ட் பண்ணும் அதிகாரம் உள்ளது. ஆனால், இவர்களையே கைக்குள்ள போட்டுக்கிட்டு "அந்த லேடி" பலருடைய வாழ்க்கையையும் ஒழிச்சி விட்டுருக்காங்க.

முதல்ல டிடி இருந்தாங்க. அவங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னு போனதுமே, இந்த லேடி அந்த இடத்தை பிடிச்சிட்டாங்க.. யாரையுமே உள்ள விடாமல் டார்ச்சர் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர், படிப்படியாக முன்னேறியவர்.. உழைப்பால் முன்னேறி, நம்பர் 1 சேனலின் கழுத்தை நெரிக்கும் வரைக்கும் விஜய் டிவியை உயர்த்தினார்.

சேனல் பெயர்: அங்குள்ள திறமை வாய்ந்த நாலைந்து பேர் கொண்ட டீம் தான் இந்த அளவுக்கு அந்த சேனலை முன்னுக்கு கொண்டு வந்தது. அதில் ஒருவரை, தன்னுடைய கைக்குள்ள வைத்துக்கொண்டு, அந்த லேடி பண்ற அட்டகாசம் தாங்க முடியல.

முழு பேரு பிரியங்கா தேஷ் பாண்டே... முதலில் பிரியங்கா, தேஷ், பாண்டே .. இந்த 3 பேருமே ஷாக்கிங்கா இருக்கு.. ஹமாரா தேஷ்ன்னாலே தமிழ்நாட்டில் எல்லாரும் மிரண்டு போயிடறாங்க.. பாண்டேன்னு சொன்னாலே, இங்கேயும் வந்தீட்டீங்களான்னு பயந்துடறாங்க.

பிரேக்கிங்: பிரியங்கா ஹமாரே தேஷ் பாண்டே-ன்னு வந்தாச்சு.. இங்கே வந்து நம்ம பசங்களை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாட்டங்க.. எப்பவுமே ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்.. உச்சிக்கு போனாலும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் வரும். அப்படி அந்த சேனலுக்கும் இப்போது வந்துருச்சு.. இந்தளவு பிரபலமான விஜய் டிவி ஒரு பெண்ணால நாசமா போயிடுமோன்னு நிலை இப்போ வந்துருக்கு. இப்போது தேஷ் பாண்டேன்ற பூனைக்கு மணிமேகலை என்ற பொண்ணு போய் மணியைக் கட்டிவிட்டுருச்சு.

அந்த பூனை எங்கே போனாலும் மணி சத்தம் கேட்டுட்டே இருக்கு.. கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல. இப்படி எல்லாம் டைட்டில் வச்சி என்னத்தைப் பண்றாங்கன்னே தெரியல. அவங்களாவே லூஸ் மாதிரி கைதட்டிக்கிறாங்க. அதையும் வாயை பிளந்துக்கிட்டு இப்படி பார்க்குறாங்க. டிஆர்பியும் ஏறுது.

வீழ்ச்சி ஆரம்பம்: இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு வந்து இவ்ளோ பேர முட்டாளாக்கிறதுக்கு 15 வருஷம் ஆகியிருக்கு. அதனால இப்படி ஒரு பெண்ணை வைத்து லூஸ் பண்ணிடாதீங்க. இதுவே சேனலின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும். அதனால சீக்கிரம் நடவடிக்கையை எடுத்தா நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

இதே AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த பேட்டியில், "எப்போதுமே ஒரு நிர்வாகம், உழைப்பவர்களை தட்டிக்கொடுத்து, வேலை வாங்க வேண்டுமே தவிர, எல்லாமே பிரியங்கா மயம் என்றால் எப்படி? அதுக்குதான் எல்லாரும் சன் பக்கம் ஓடறாங்க.. இவ்வளவு குறைபாடுகளை வைத்து கொண்டு நிர்வாகம் தூங்குகிறது. இப்படியே தூங்கிட்டு இருந்தால், விஜய் டிவியை இழுத்து மூட வேண்டியதுதான்.. ஏற்கனவே பல டிவிக்காரங்க ஓடிட்டாங்க.. நிர்வாக சீர்கேடுகளை எப்போதுமே மெருகேற்ற கூடாது... உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்றார் பாண்டியன்.

அதுமட்டுமல்ல, ஹேமா கமிட்டி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கும் நிலையில், இனி விஜய் டிவிக்குள்ளேயே ஹேமா கமிட்டி போகப்போகுது. சின்னத்திரை நடிகைகள் பற்றி எஸ்வி சேகர் அன்று சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.. அதனால், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக்கூடாது.. விஜய் டிவியில் எல்லார் மீதும் விமர்சனம் உள்ளது.. பிரியங்கா, பிரதீப்பை மட்டுமே அனைவருமே புகார் சொல்கிறார்கள்.. ஒருத்தர், 2 பேர் என்றால் பரவாயில்லை.. விஜய் டிவியிலிருந்து வெளியேறியவர்கள் எல்லாருமே ஒரே மாதிரியான புகார்கள் சொல்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+