எத்தனை நாள் உயிரோடு இருக்க போறேன்னு தெரியல..வெற்றி பெற்ற பணத்தை ரமணியம்மாள் செய்த செயல்..!?
சென்னை: ஜீ தமிழ் சரி கம பா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ரமணியம்மாள் இன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாடகி ரமணி அம்மாள் உடலுக்கு தொகுப்பாளர் அர்ச்சனா நேரில் சென்று அழுதப்படியே அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
69 வயதான ரமணியம்மாள் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடவுளிடம் வேண்டுதல்
நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணியம்மாள் இன்று காலமானார். இதனை அடுத்து அவர் நிகழ்ச்சியில் பல பேசிய பல விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் ஒன்றில் ரமணியம்மாள் நான் கடவுள் கிட்ட எப்போ வேண்டிகிட்டாலும் உலக மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும். எல்லோரும் பசி இல்லாமல் சந்தோஷமாக சாப்பாடு இருக்கணும் என்று நான் வேண்டிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

தூய மனது
மேலும் நான் மற்றவர்களுக்காக வேண்டிக்கொள்கிறதால் தான் கடவுள் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். இந்த அளவுக்கு என்னை உயர்த்தி வைப்பார் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. எங்கேயோ கிடந்த என்னை இந்த அளவிற்கு கடவுள் கொண்டு வந்து நிற்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே தூய மனசு தான் என்று கூறி இருக்கிறார்.

எமோஷனலான வார்த்தை
மேலும் தூய்மையான உள்ளம் இருந்தால் நீங்களும் கண்டிப்பா ஒரு நாள் பெரிய ஆளாக வரலாம். மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்கவே நினைக்காதீங்க. விரோதியாக இருந்தாலும் அவங்களும் நல்லா இருக்கணும்னு நினைச்சுக்கோங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் என்னால முன்னாடி மாதிரி இப்போ பாட முடியல இருந்தாலும் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு. எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருக்க போறேன்னு தெரியல. இருக்கிற வரைக்கும் பாடிட்டு இருக்கணும் என்பது என்னுடைய நோக்கம் என்றும் அந்த மேடையில் அவர் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

பணம் என்ன ஆனது
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரமணி அம்மாளுக்கு 5 லட்சம் ரூபாயும் 5 சென்ட் நிலமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தனக்கு கிடைத்த ஐந்து லட்சம் ரூபாய் தன்னுடைய ஏழு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு 5 சென்ட் நிலம் திண்டிவனத்தில் காரில் அழைத்து செல்லப்பட்டு பத்திரவு செய்யப்பட்டதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications