மணிமேகலையின் "சொம்பு".. மகாபாவின் "செருப்பு".. DJ பிளாக்கின் "துடைப்பம்".. பிரியங்காவுக்கு செம ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியங்கா - மணிமேகலை விவகாரம் இதுவரை முடிவுக்கு வராத நிலையில், மணிமேகலைக்கு எதிரான விமர்சனங்களை, விஜய் டிவியின் பிரபலங்கள் முன்வைத்து வருகிறார்கள். இதற்கு நெட்டிசன்கள் திரண்டு சென்று பதிலடி தந்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை, விலகுவதாக அறிவித்துவிட்டார். இதற்கு காரணம், பிரியங்கா என்று கூறி நெட்டிசன்கள் பதிவிட்டும், பிரியங்காவுக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

television manimegalai priyanka

அதேபோல, மணிமேலைக்கு ஆதரவாக விஜய் டிவியின் பிரபலங்களும் ஆதரவு தந்தனர்.. துணிச்சலான முடிவு என்று கூறி வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்திருந்தனர். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த கமெண்ட்களை அவர்களே உடனடியாக நீக்கியும் விட்டார்கள்.. பிரியங்காவும், மணிமேகலையும் வாதம் செய்வதுபோல வெளியான ஆடியோவும் டெலிட் செய்யப்பட்டுவிட்டது.

புகழ், பிரியங்கா: இதற்கு நடுவில், குக் வித் கோமாளியில் ஆரம்ப சீசனிலிருந்தே பங்கேற்று வரும் புகழ், பிரியங்காவின் நெருங்கிய நட்பான மகாபா ஆனந்த் போன்றோர், இந்த விவகாரம் பற்றி கருத்து சொல்லாமல் நழுவினார்கள். இது ஒருவகையில் பிரியங்காவுக்கான மறைமுக ஆதரவாகவே பார்க்கப்பட்டது.

மேலும், சூப்பர் சிங்கர் பூஜா, பிரியங்காவின் தோழியான பாவனி ரெட்டி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுனிதா, குரேஷி, நடிகை ஷகிலா போன்றோர்கள் பிரியங்காவுக்கு திடீரென ஆதரவை வழங்கியதுடன், மணிமேகலையையும் மறைமுகமாக விமர்சித்திருந்தனர். இப்படி விஜய் டிவியின் பிரபலங்கள், பிரியங்காவுக்கு திடீரென ஆதரவை வழங்குவதன் பின்னணியில் விஜய் டிவி நிறுவனத்தின் பங்கு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

பிரியங்காவின் சொம்பு: நாளுக்கு நாள் தன்னை இவர்கள் அனைவரும் மறைமுகமாக விமர்சிக்கவும், "பிரியங்காவின் சொம்பு" என்று குறிப்பிட்டு சமீபத்தில் மணிமேகலை வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை? என்று கேட்டிருந்த கேள்வியும், அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது..

television manimegalai priyanka

மணிமேகலையின் இந்த பதிவுக்கும், விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.. அந்தவகையில், மாகாபா ஆனந்த் ஒரு சொம்பு பதிவை போட்டிருக்கிறார்.

அதில், "அமானுஷ்யம்" என்று குறிப்பிட்டு, அதிலிருந்து தள்ளி இருக்க செருப்பு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்... இதை பார்த்த நெட்டிசன்கள், அமானுஷ்யம் என்று மணிமேகலையை மகாபா குறிப்பிடுவதாக கூறி, கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஸ்டேட்டஸ்: மகாபாவை போலவே, டிஜே பிளாக்கும், தன்னுடைய இன்ஸ்டாவில் மணிமேகலைக்கு எதிராக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். அதில், மாகாபா ஆனந்தின் போஸ்ட் தன்னை ஈர்த்துவிட்டதாகவும், தங்களை சுற்றி அமானுஷ்ய சக்திகள் நெருங்காமல் இருக்க இதுதான் சிறந்த வழி என்றும் கூறி,செருப்புகளுடன் துடைப்பம் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்

இப்போது மறுபடியும் மாகாபா, டிஜே பிளாக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.. அதில், சொம்புக்கு என்ன மரியாதை மயிரு? என்று கோமாளி எமோஜியை பதிவிட்டு, இந்த செருப்ப எடுத்து ஸ்டோரி போடுடா என்று குறிப்பிட்டுள்ளார்...

இது தேவையா: இந்த போஸ்ட்டுக்கு பின்னணியில், ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள என்ற பாட்டையும் பதிவிட்டுள்ளார். இந்த செருப்பு, துடைப்பம் பதிவுகள்தான் வைரலாகி கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு பெண்ணை அவமானப்படுத்த வேண்டுமா? என்று மணிமேகலையின் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, மகாபா தன்னுடைய ஸ்டோரியில், செருப்பு போட்டோவை வெளியிட்டு, சனிக்கிழமை எல்லாம் ப்ரியாதான் இருப்பாங்க. சோ வீடியோ போடும். வாங்க செருப்பு போட்டோதான் இருக்கு" என்று கூறியுள்ளார்.

இதைப்பார்த்த இணையவாசிகள், மணிமேகலை சனிக்கிழமைதோறும் பதிவுகளை வெளியிட்டு வருவதை தான், மாகாபா இப்படி குறிப்பிட்டு இனி வீடியோ போட்டால் செருப்புதான் என்பது போல் கருத்து தெரிவித்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். எப்படியிருந்தாலும், சக தொகுப்பாளரை இப்படி தரம்தாழ்ந்து விமர்சிக்கலாமா? என்று கேட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+