மனோஜூக்கு கடைசி நேரத்தில் என்னாச்சு? உயிர் பிரிந்தது எப்படி? மண்ணோடு மண்ணா போன ஆசை: பிரபலம் வேதனை
சென்னை: இவ்வளவு பெரிய டைரக்டரின் மகன், மிகப்பெரிய டைரக்டராக வர முடியவில்லையே? என்ற எண்ணம் மனோஜூக்கு இருந்தது.. மனோஜின் அப்பா பாரதிராஜா என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.. சினிமாவில் ஒரு உயரத்தை அடையணும் என்ற வருத்தம் மனோஜூக்குள் கடைசிவரை இருந்தது.. அது மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.
AramNaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நம்பவே முடியல, கேள்விப்பட்டதுமே அதிர்ச்சியாக இருந்தது.. வேதனையான விஷயம்.. மனோஜ் பாரதிக்கு 48 வயதாகிறது.. கனவுகளை அடையாமல், லட்சியங்களை அடையாமல் இறந்துள்ளது அதைவிட வேதனையான விஷயம்..

அப்பாபோல இயக்குனராகவும், பிரபல நடிகராகவும் வரவேண்டும் என்பதே மனோஜின் ஆசையாக இருந்துள்ளது. அதனால்தான், பாரதிராஜாவின் படங்களில் தொடர்ந்து உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார்.
இதற்கு பிறகு, தாஜ்மஹால் படத்தில் மகனை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.. புழுதியிலே முரட்டுத்தனமான கேரக்டரில் நடித்திருந்தார் மனோஜ்.. அந்தவகையில் தாஜ்மஹால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அன்று இருந்தது.. பெரிய வியாபாரம் இருந்தபோதும், அந்த படம் ஓடவில்லை. இது மனோஜூக்கு பெருத்த வேதனையை தந்தது..
அங்கீகாரம் கிடைக்காத மனோஜ்
சரண் இயக்கிய அல்லி அர்ஜுனா படத்தில், மனோஜ் மார்டன் கேரக்டரில் நடித்திருந்தார்.. அதுவும் பெரிய வெற்றிப்படமாக இல்லை அதற்கு பிறகுதான் ரியாலிட்டியை புரிந்துகொண்டு, சமுத்திரம் படத்தில் நடித்தார்.. முதன்முதலில் அடையாளத்தை கொடுத்த படம் சமுத்திரம். அதற்கு பிறகு, பல படங்களில் நடித்தும்கூட பெரிதாக அவரால் வளர முடியவில்லை..
மணிரத்னம், ஷங்கர் இயக்குனர்களிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார். இதற்கு பிறகு அவர் எடுத்து வைத்த முயற்சிகளும் கை கொடுக்காமலேயே போய்விட்டது.
பாரதிராஜா மகனின் இழப்பை எப்படி தாங்க போறாருன்னு தெரியல.. புத்திர சோகத்தைவிட பெரிய சோகம் இப்போது பாரதிராஜாவுக்கு வந்துள்ளது.. பவதாரணி இறந்தபோதும், இளையராஜா வாழ்வில் மிகப்பெரிய தாக்கம்.. அப்போதுகூட, பாரதிராஜாவால் பவதாரணி இழப்பை தாங்க முடியவில்லை.. இளையராஜா குடும்பத்துடன், நட்பையும் தாண்டிய உறவாக இவர்களுக்குள் உள்ளது.
எப்படித்தான் தாங்க போறாரோ
பவதாரணி இறந்தபோதே குலுங்கி குலுங்கி அழுதார் பாரதிராஜா. அவரை சமாதானப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி வெங்கட் பிரபு உள்ளிட்டோர் அழைத்து சென்று உட்கார வைத்தார்கள்.. ஏற்கனவே பாரதிராஜாவே வயது மூப்பில், தளர்ச்சியில் இருக்கிறார். அவருக்கு இதுநாள் வரை துணையாக இருந்ததே மனோஜ்தான். இப்போது மனோஜே தவறிவிட்டால், பாரதிராஜா எப்படி இந்த அதிர்ச்சியை தாங்க போறாரோ? தெரியவில்லை.
இருதய பாதிப்பு - பைபாஸ்
ஏற்கனவே மனோஜ்க்கு இருதய பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக சில மருத்துவ சிகிச்சைகள் எடுத்துட்டு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் பைபாஸ் சர்ஜரி செய்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் வந்தது.. பொதுவாக, 60 சதவீதம் கீழ் மாரடைப்பு என்றால், மருந்து, மாத்திரைகளில் கரைத்துவிடலாம். 90 சதவீதம் அடைப்பு என்றால், ஸ்டண்ட் வைத்து சரிசெய்துவிடலாம். 90- சதவீதத்துக்கு மேல் அடைப்பு என்றால் பைபாஸ் ஒரே வழி.
ஆனால், மனோஜூக்கு வேறு என்ன உடம்பில் தொந்தரவு இருந்தது என்று தெரியவில்லை. ஒரு மாதமாக சிகிச்சை முடிந்து ஓய்வில்தான் இருந்து வந்துள்ளார்.. ஒரு தயாரிப்பாளர் தான் கேள்விப்பட்ட செய்தியை என்னிடம் சொல்லும்போது, "நெஞ்சுவலி என்று மனோஜ் சொன்னதாகவும், உடனே என்னாச்சு? என்று பதறும்போதே, ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாகவும் சொன்னார்..
இருவரின் ஆசையும் நிறைவேறவில்லை
இத்தனை பேரை அறிமுகப்படுத்தி, உயர்ந்து இடத்துக்கு கொண்டு வந்த தன்னால், தன்னுடைய மகனை கொண்டுவர முடியவில்லையே என்ற ஏக்கம் பாரதிராஜாவுக்கு இருக்கவே செய்தது.. அதேபோல, இவ்வளவு பெரிய டைரக்டரின் மகன், மிகப்பெரிய டைரக்டராக வர முடியவில்லையே? என்ற வருத்தமும் மனோஜூக்கு இருக்கவே செய்தது. சினிமாவில் ஒரு உயரத்தை அடையணும் என்ற எண்ணம் மனோஜூக்குள் இருந்து கொண்டேயிருந்தது. அது மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது" என்று பாலாஜி பிரபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications