கயல் சீரியல் சுபாஷினி இறப்பதற்கு முன்பு நடந்தது இது தான்! ரியாஸ் கான் வீட்டு பங்க்ஷனில்! நடிகை உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினியின் திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் இறந்து சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவருடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை அபிநவ்யா சுபாஷினி பற்றி சில தகவல்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

யார் இந்த சுபாஷினி?
சுபாஷினி, சன் டிவியின் பிரபலமான "கயல்" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இயல்பான நடிப்பாலும், அமைதியான தன்மையாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். சீரியல் குழுவினருடனும், குறிப்பாக சக நடிகர்களுடனும் நெருக்கமாக பழகியவர் என கூறப்படுகிறது.
எப்படி நடந்தது இந்த சம்பவம்?
சுபாஷினி தற்கொலை செய்து கொண்ட நாளில், தனது வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், பெங்களூரில் வசித்து வரும் அவரது கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பிறகே இந்த துயரமான முடிவு ஏற்பட்டதாக சொல்லப்படுவது சம்பவத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடியோ கால் விவரம், அவரின் கடைசி போன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
கணவர் மீது குற்றச்சாட்டு
சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் நேரடியாக அவரது கணவர் பிபின் சந்திராவையே குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பரவுவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், பிபின் சந்திரா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "நீ இல்லாமல் நான் இல்லை... இதை நம்ப முடியவில்லை... நீ எப்போதும் என்னுள் வாழ்கிறாய்..." என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், ஒருபுறம் குற்றச்சாட்டு, மறுபுறம் அனுதாபம் என இருவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.
சக நடிகை அபிநவ்யா வருத்தம்
சுபாஷினியுடன் "கயல்" சீரியலில் நடித்த நடிகை அபிநவ்யா, இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "சுபாஷினி எங்களுடன் 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடித்தார்." "சமீபத்தில் ஆறு ஏழு மாதங்களாக அவருக்கு ஷூட்டிங் குறைவாக தான் இருந்தது. ஆனாலும், எங்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார்." அவர் தனது கணவர் பற்றி ஒருபோதும் தவறாக பேசியதே இல்லை."
உமர் ரியாஸ்கான் வீட்டு பங்க்ஷன்
இருவரும் மிகவும் பொருத்தமான தம்பதிகள் போலவே இருந்தார்கள். மேலும், சமீபத்தில் நடிகை உமாரியாஸ்கான் குடும்ப விழாவில் கூட இருவரும் சேர்ந்து வந்ததாகவும், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததாக எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் அவர்கள் இருவரும் தம்பதிகளாக அழகாக இருந்தார்கள் அதை பார்த்து என்னுடைய அம்மாவை இவர்கள் பொருத்தமான ஜோடி என்று பாராட்டுனாங்க.
ஆனால் சுபாஷினி இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கே புரியவில்லை என்று அபிநவ்யா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கடைசி இன்ஸ்டாகிராம் பதிவுகள்
சுபாஷினியின் கடைசி சமூக வலைதள பதிவுகளும் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அதில் அவர் மகிழ்ச்சியாக வெளிநாட்டில் சுற்றுலா சென்று இருந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இதனால், "இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் ஏன் இப்படிச் செய்தார்?" என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications