நடிகை கனகாவை நினைவு இருக்கிறதா?பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன?உதவியாளர் சொன்ன விஷயம்
சென்னை: நடிகை கனகாவின் வீட்டில் தீப்பிடித்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகை கனகாவின் வீட்டில் என்ன நடந்தது என்று அவருடைய உதவியாளர் சில தகவல்களை கூறி இருக்கிறார் அதை விரிவாக பார்க்கலாம்.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகை கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அப்போ முதல் இப்ப வரைக்கும் இவருடைய கண்ணுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட ஹிட்டான திரைப்படங்களை கொடுத்த நடிகை கனகா தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாளத்தில் இவர் காட்பாதர் என்கிற திரைப்படத்தின் மூலமாக மலையாள ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகை கனகா சுமார் 30 வருடங்களாகவே காணாமல் போய்விட்டார். இந்த நிலையில்தான் சமீபத்தில் இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் ரசிகர்களின் மத்தியில் மீண்டும் கனகா எங்கே போனார்? அவருக்கு என்ன ஆனது? எதற்காக வெளி உலகத்திற்கு வரவில்லை என்று பலரும் அவரைப் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
என்னதான் பலர் இவருடைய பழைய திரைப்படங்களை பார்த்து பழகி இருந்தாலும் இவர் சமீபத்தில் ஒரு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது. இப்ப இருக்கிற ஜெனரேஷன் பலருக்கும் கனகாவை தெரியவில்லை என்றாலும் அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு அவருடைய லேட்டஸ்ட் வீடியோ அதிர்ச்சியை தான் கொடுத்து இருக்கும்.
சொத்து விஷயத்தில் அவருடைய அப்பாவோடு ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல், கைவிட்ட கணவர் என பல பிரச்சனைகள் அவருக்கு வந்ததால் பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமை வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் பற்றி பல வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனிமையாக தன்னுடைய வீட்டில் நடிகை கனகா வாழ்ந்து இருக்கிறார்.
கனகா வீட்டில் இருந்து கருப்பு புகை வந்ததாக அங்குள்ள மக்கள் கூறவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கே சென்ற நேரம் அவர்களை உள்ளே விடாமல் திட்டியதாகவும் நீண்ட நேரத்திற்கு பிறகு அனுமதித்ததாகவும் அப்போது கூறப்பட்டது. அப்போது உள்ளே தீயணைப்பு வீரர்கள் சென்ற போது வீடு எங்கும் குப்பைகள், மூட்டை கட்டிய துணி என வீடே குப்பை குளமாக இருந்திருக்கிறது. பிறகு சிரமப்பட்டு தீயை அணைத்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதற்கு காரணம் நடிகை கனகா வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கிறது. பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் பரவியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கனகா வீட்டில் இருந்த பொருள்கள் அதிகமாக எரிந்து சாம்பலாகி இருக்கிறது. இதுதான் அந்த பாழடைந்த வீட்டில் நடந்தது என்று செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
இதுகுறித்து கனகாவின் உதவியாளர் கூறுகையில், கனகா தன்னிடம் நெருங்கிய உறவினர்களின் மோசமான நடத்தையால் தான் யாருடனும் நெருங்கி பழகவில்லை என்று கூறியதாகவும், அவர் எந்தவித உதவி கேட்டாலும் நான் செய்து கொடுக்கிறேன். ஒருமுறை வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கலாம் என்று சொன்னேன் அவர் பார்க்கலாம் என்று பதிலளித்தார். அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் அவர் வாழ்க்கையை வாழ விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications