டோரதி பார்த்து விட்டு இளையராஜா சொன்னது.. முத்துமணி பாடல் உருவானது பற்றி கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டோரதி படம் பார்த்தவர்களுக்குள் இப்போது ஒரே மாதிரியான கருத்து இல்லை. சிலர் படத்தின் முயற்சி, கேரக்டர்கள், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பு, இளையராஜாவின் இசை என எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் படத்தின் 2ம் பாதியில் மற்றும் இறுதியில் வரும் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் விமர்சப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு நடுவில் இன்னொரு பேச்சும் கிளம்பியது. இளையராஜாவிடம் கதையை முழுசாக சொல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் பாடல்களை வாங்கி விட்டாரா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள். படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு இப்படிப்பட்ட கதைக்கு இளையராஜா எப்படி இசையமைப்பார்? என்று கேள்வி எழுப்பியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி கார்த்திக் சுப்புராஜ் பேட்டியில் பேசி இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

அதாவது நான் இந்த படத்தை எடுத்த பிறகு சில ரெபெரென்ஸ்களுடன் இளையராஜா சாரிடம் போய் படத்தை காட்டினேன். அவர் படத்தை முழுமையாக பார்த்தார். படத்தில் லாஸ்ட் ஆக வரும் அந்த பகுதிக்கு ஒரு பெண் புதிதாக இந்த உலகத்திற்கு பிறக்கிறாள், அவர் இதற்கு முன்பு அனுபவித்த கஷ்டங்கள் சோகங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி ஒரு புது பெண்ணாக வாழப் போகிறாள் என்பதை சொல்வது போல எனக்கு ஒரு பாட்டு வேண்டும் என்று நினைத்தேன்.

Dorothy Karthik Subbaraj Ilayaraja

ரெபெரென்ஸ் பாடல்

அதற்கு வருஷம் 16 படத்தில் வந்த "பூப்பூக்கும் ஆசை" என்ற பாடலை ரெஃபரென்ஸாக வைத்திருந்தேன். அதை இளையராஜா சாரிடம் சொன்னதும் அவர் இந்த ரெஃபரன்ஸ் சரிதான் ஆனால் இந்த இடத்தில் இதைவிட இன்னும் சிறப்பாக ஏதாவது செய்யலாம் என்று சொன்னார். அதற்கு பிறகு உருவானது தான் முத்து மணி மாலை பாடல் அந்த பாடலை கொண்டு வந்த விதத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.

இளையராஜா முன்னிலையில் தொடங்கிய மஞ்சனத்தி.. மாரி செல்வராஜின் அந்த ஒரு வரியில் இருக்கும் கதை என்ன?
படத்துக்கு என்ன தேவையோ அதை அவருடைய பாடலாலும், இசையாலும் கொண்டு வந்துவிட்டார். படத்தின் கதை ஒரு பக்கம் என்றால் மியூசிக் தான் இந்த படத்தில் ஆன்மா என்று கார்த்திக் சுப்புராஜ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இங்கே தான் கார்த்திக் சுப்புராஜின் இந்த விளக்கம் முக்கியமாகிறது. படத்தை பார்க்காமலே இளையராஜா இசை அமைத்துவிட்டாரா? என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் அவர் சொல்வது அதற்கு முற்றிலும் மாறான கதை.

Dorothy Karthik Subbaraj Ilayaraja

முத்துமணி பாடல் வரிகள்

படத்தை முதலில் பார்த்தவர் இளையராஜா தான். அதற்கு பிறகு காட்சிக்கான தேவையை புரிந்து கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்று கார்த்திக் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த பாடல் படத்தில் ஹீரோவுக்கும் திருநங்கையாக மாறிய அவருடைய தோழிக்கும் உள்ள பாடலா? அல்லது இளையராஜா அவருடைய மகள் பவதாரணியை நினைத்து பாடியதா? என்று சந்தேகம் பலருக்கு இருக்கிறது. காரணம் அதில் வந்த வரிகள் தான். அதாவது அது அந்த பாடலில் ஒரு இடத்தில்,

"வண்ண கிளியே உன்னை காணாத நாள் இங்கு நாள் இல்லையே.. நாள் இல்லையே..

பொன்மயிலே நீ இல்லாமல் பொழுது இங்கு நகரலையே.. நகரலையே..

அக்கம் பக்கம் போனபோது உன்னை பார்த்தவன் நான்..

பக்கம் பக்கம் இருந்தபோது உன்னை பார்க்கலையே..

அருகில் இருந்த போது நானும் வெகு தூரத்திலேயே...

தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலேயே.. என்று வரும் வரிகளை கேட்கும் போது இறந்து போன தனது மகளை எண்ணி இளையராஜா உருக்கமாக இசையமைத்திருக்கிறாரா? என்று கேள்விகளும் தெரிகிறது.

இளையராஜாவின் விளக்கம்

இளையராஜா ஏற்கனவே பவதாரணி இறந்த சமயத்தில் சில பேட்டிகளில் பேசும்போது, நான் என்னுடைய மகளை சரியாக கவனிக்கவில்லை.. வேலை வேலை என்று இருந்ததால் என்னுடைய மகளுடன் அதிகமான நேரத்தை செலவிடவில்லை" என்று சொல்லி இருந்தார். இதனால் தன்னுடைய மகளுக்கான பாடலா இது? என்பதும் சிலரது கேள்வியாக இருந்தாலும், பாடல் பேவரைட் ஆக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+