சீதாராமன் சீரியலை விட்டு கண்ணீரோடு விலகும் பிரியங்கா நல்கரி..இப்படி ஒரு காரணமா..?
சென்னை: ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்கரி சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரியங்காவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இருந்தது.
இந்த நிலையில் அவருடைய கணவரால் தான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலமாக தமிழில் அறிமுகமான பிரியங்கா நல்கரி அந்த சீரியலின் மூலமாகவே பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அவரே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் தனக்கு தமிழில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் கிடைக்கும் என்று அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும சீதாராமன் என்னும் சீரியலில் திருச்செந்தூர் பாஷை பேசி கதாநாயகியாக பிரியங்கா நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய பேச்சி வழக்கு உண்மையான திருச்செந்தூர் பாஷை கிடையாது என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் ஆனாலும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.
இந்த சீரியலுக்கான முதல் பிரமோ வெளியானது தான் தாமதம் அது மில்லியன் பார்வைகளைத் தொட்டு பலரையும் வியக்க வைத்திருந்தது. இந்த சீரியலில் பிரியங்கா மட்டும் அல்லாமல் ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி உட்பட பல நடித்து வருகின்றனர். சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகன் தான் இந்த சீரியலிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் கலகலப்பான மாமியார் மருமகள் சண்டை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலே டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஹீரோயின் பிரியங்கா வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அந்த சீரியல் ரசிகர்கள் மட்டும் சேனல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
பிரியங்காவிற்கு கடந்த மார்ச் மாதம் தான் ராகுல் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆந்திராவை சேர்ந்த ராகுல் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல் சினிமாக்களில் நடித்து வந்தார். இப்போது மலேசியாவில் செட்டில் ஆகி இருக்கிறார். ஏற்கனவே ராகுல் மற்றும் பிரியங்கா இருவருக்கும் காதலித்து எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்பந்தத்தோடு இப்போது எளிமையான திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பெரியவர்கள் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லையே என்று சர்ச்சைகளும் கிளம்பி கொண்டிருந்த நிலையில் அது குறித்து பிரியங்கா விளக்கமும் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பிரியங்கா சீரியலை விட்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சி தான்.
அது மட்டுமல்லாமல் பிரியங்கா திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவரோடு மலேசியா சென்றுவிட்டாராம். இப்போ சூட்டிங்கு மலேசியாவில் இருந்து தான் வந்து போய்க்கொண்டிருக்கிறாராம். இந்த மாச கடைசி வரைக்கும் இவர் இந்த சீரியலில் இருப்பார் என்று தகவல்கள் பரவி வருகிறது.
பிரியங்காவிற்கு சீரியலில் நடிக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாம் ஆனால் கணவருக்கு தான் பிரியங்கா தொடர்ந்து நடிப்பதில் சம்மதம் இல்லையாம். அதனால்தான் நான் இங்கே நல்ல சமாதிக்கிறேன். அதனால நீ நடிச்சது போதும் என்று சொல்லிவிட்டாராம். கணவரின் பேச்சை மீற முடியாத பிரியங்காவும் விருப்பம் இல்லாமல் தான் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications