நடிகர் மதுரை முத்து வாங்கிய பிரம்மாண்ட கார்.. விலை மட்டும் இத்தனை லட்சமா? தரமான இன்ஸ்டா பதிவு!
சென்னை: சன் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த மதுரை முத்து தற்போது பிரம்மாண்டமான கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படத்தை மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். புது கார் வாங்கிய மதுரை முத்துவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தினால் எப்படியாவது வாழ்க்கையில் சாதித்து முன்னுக்கு வரலாம் என்பதற்கு பல பேரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் பலருக்கும் பரிச்சயமான மதுரை முத்துவும் இருக்கிறார். நகைச்சுவை பேச்சாளராக இருக்கும் மதுரை முத்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார்.

டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கும் மதுரை முத்து திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அது தவிர பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக மதுரை முத்து கலந்து கொள்ளும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் மேடைகளில் ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அதில் எப்படியும் 25 முதல் 30 முறையாவது பார்வையாளர்களை தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்து விடுகிறார். பலர் பேசும் மொக்கை காமெடிகளுக்கு கூட மதுரை முத்து தான் அடையாளமாக இருக்கிறார். அதனாலேயே மதுரை முத்து ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

சன் டிவி, விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் மதுரை முத்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தான் வாங்கிய புதிய சொகுசு காரோடு அவர் நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

அதில் "உங்கள் அன்பின் ஆதரவில் இல்லத்திற்கு புதிய தோழன் வருக" என அந்த காரை குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது ரசிகர்களை பெருமைப்படுத்தி குறிப்பிட்டு தன் வீட்டிற்கு வந்த புதிய தோழன் என்று தனது புதிய காரை மதுரை முத்து கூறியிருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் மதுரை முத்து இன்னோவா ஜெட் எக்ஸ் ஹைட்ரைட் என்ற காரை வாங்கி இருக்கிறார். இதன் விலை மட்டும் 34.48 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 34 அரை லட்சம் ரூபாய் அந்த கார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications