CWCயை விட்டு இதனால் தான் போகிறேன்.. என்னோடு தான் தாமுவும்! திடீர் வீடியோ வெளியிட்ட வெங்கடேஷ் பட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எப்போது ஐந்தாவது சீசன் தொடங்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேற்று செப் வெங்கடேஷ் பட் திடீர் போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் தான் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து இன்று சமூக வலைதள பக்கத்தில் செப் வெங்கடேஷ் பட் புது வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் எதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அதோடு தன்னோடு புதிய நிகழ்ச்சியில் செஃப் தாமுவும் கலந்து கொள்ள போகிறார் என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் மக்களின் மனதை இலகுவாக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் பலரும் தங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறி வருகிறார்கள். காரணம் இந்த நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறது.
அதோடு நடுவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருமே போட்டியாளர்களிடம் கலகலப்பாக விளையாடிக் கொண்டு சமையலிலும் நிறை குறையை எடுத்து சொல்லி மக்களின் மனதை கவர்ந்து இருக்கிறார்கள். அதுபோல இதுவரைக்கும் குக் வித் கோமாளி 4 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த 4 சீசனிலும் கலந்து கொண்ட பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர்.
அதுபோல இது நான்கு சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் திடீரென்று நேற்று வெங்கடேஷ் பட் தான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர், நான் புதிய சீசனில் பங்கேற்கவில்லை. இதை நான் தெளிவுபடுத்துகிறேன் என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுத்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம்தான் என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்ட முடிந்தது. நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி தான்.
24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து இருக்கிறேன். நிகழ்ச்சி இயக்குனர் உட்பட அனைவருக்குமே நன்றி. மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவரின் மன அழுத்தத்தை குறைக்கும் வித்தியாசமான இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
இந்த முடிவு கடினமாக இருந்தாலும் நான் அதில் உறுதியாக இருக்கிறேன் விரைவில் வர இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று வெங்கடேஷ் பட் புதியதாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் நேற்று வெளியிட்ட பதிவுக்கு மக்கள் மத்தியில் அதிகமான கமெண்ட்களை பார்க்க முடிந்தது.
ஆனாலும் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான்கு வருஷத்துக்கு அப்புறமா இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன். இனி நான் எனக்கு பிடித்ததை செய்யப் போகிறேன் வெகு விரைவில் ஒரு பெரிய அனௌன்ஸ்மெண்ட் உங்களுக்கு காத்திருக்கிறது. அதில் நானும் செஃப் தாமுவும் சேர்ந்து தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கப் போகிறோம் என்று வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications