கே.எஸ் ரவிக்குமாரை விட்டு பிரிந்த காரணமே இதுதான்! முதல் முறை மனம் திறந்த சேரன்.. நெகிழ்ச்சி வார்த்தை
சென்னை: இயக்குனர் சேரன் தான் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் இருந்து பிரிந்து வந்தது எதற்காக என்பது குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
வெற்றி என்பது யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடாது. ஆரம்பத்தில் பல போராட்டங்களையும், அவமானங்களையும் தாண்டி தான் பலர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தாங்கள் வெற்றி பெற்ற கதை மற்றும் ஆரம்பத்தில் பட்ட அவமானங்கள் குறித்து பலர் சொல்லும்போது தான் இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகுதான் வெற்றி கனியை இவர்களால் ருசிக்க முடிந்ததா? என்று எல்லோருக்கும் வியப்பு ஏற்படும்.

அந்த மாதிரி தான் நடிகராகவும் இயக்குனராகவும், பிரபலமான சேரன் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் சேரன் பேசுகையில், நான் உதவி இயக்குனராக இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் இருந்த நிலையில் திடீரென்று அவரிடம் இருந்து எதற்காக விலகினேன் என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்று தான் மதுரை மேலூரில் இருந்து சென்னைக்கு வந்த சேரன் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலமாக உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதற்கு பிறகு சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை பல படங்களில் கே எஸ் ரவிக்குமாரோடு வேலை செய்து இருக்கிறார்.
பிறகு அவரிடம் இருந்து விலகி வந்து நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பார்த்திபன் மற்றும் நடிகை மீனா நடித்த பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி இருக்கிறார். இது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சாதித்திருந்தது. அதை தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என்று பல படங்களை இயக்கியிருக்கிறார்.
அதுபோல சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கே.எஸ். ரவிக்குமார் குறித்து அவர் பேசுகையில், கே எஸ் ரவிக்குமார் சாரிடம் நான் உதவி இயக்குனராக இருந்தேன். அவருக்கும் எனக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரதான் செய்யும். அது மனதில் இருந்து தோன்றுவதாக இருக்காது. சில காட்சிகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்லுவேன் ஆனால் அவர் இது வேண்டாம் என்று சொல்லுவார்.
இதற்கு காரணம் எனக்குள் இருந்த இயக்குனர் தான். அவன்தான் இப்படி பேசு என்று என்னை ஒவ்வொரு இடத்திலும் தூண்டிக்கொண்டே இருந்தான். அதனால் நான் அவரிடம் ஏதாவது விவாதம் செய்வேன். பிறகு நானே வரவில்லை என்று வந்து விடுவேன். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் நாம் அவரிடம் போய் நிற்பேன். அவர் என்ன வந்திருக்க என்று கேட்பார்.
நான் வேலை வேண்டும் என்று சொல்லுவேன். ஏதோ கோபப்பட்டு போனேன் என்று சொல்லுவார். நானும் மன்னித்துவிடுங்கள் சார் என்று சொல்லி விடுவேன் எனக்கு வேற வழி இல்ல. வறுமையின் காரணமாக மீண்டும் அதே வேலையை பார்க்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் அவரிடம் போய் நிற்பேன். ஆனால் எத்தனை முறை நான் போய் நின்னாலும் அவர் என்னை ஏற்றுக் கொள்வார். அதற்கு காரணம் என்னிடமிருந்த திறமையா? அல்லது என்னை அவருக்கு பிடித்திருந்ததா? என்று தெரியவில்லை.
ஏதோ ஒன்று அவர் என்னை ஒவ்வொரு முறையும் ஏற்றுக் கொள்ள வைத்தது. அவரிடம் இருந்து நான் முழுமையாக விலகியது பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது. எப்போதும் போல தான் அவரிடம் இருந்து வெளியே வந்தேன் அதற்குப் பிறகு எனக்கு என்று சில வாய்ப்புகள் கிடைத்ததால் இயக்குனராக மாறிவிட்டேன் அவ்வளவுதான் என்று சேரன் பேசியிருக்கிறார்.
அதோடு சேரனின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. அப்போது தன்னுடைய குருவான கே.எஸ் ரவிக்குமாரை மறக்காத சேரன் கே.எஸ் ரவிக்குமாரை தாலி எடுத்துக் கொடுக்க வைத்து தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications