எதிர்நீச்சலுக்கு எமனாய் வந்த மெயில்! அடுத்த நாளே இயக்குனர் சொன்ன வார்த்தை.. முடிவுக்கு காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூன் 8-ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியது. அதை உறுதி செய்யும் வகையில் சீரியல் நடிகர்களும் போஸ்ட் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் எதற்காக இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார் இவர் ஏற்கனவே கோலங்கள் உட்பட பல சீரியல்கள் இயக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதிலும் இதுவரைக்கும் சீரியலே பார்க்காத பல ஆண்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கத் தொடங்கினார்கள். அதனாலேயே அரசியல் பிரமுகர்கள் முதல் நடிகர் விஜய்யின் அம்மா வரை பலரும் இந்த சீரியலை பேட்டிகளில் பாராட்ட தொடங்கி இருந்தார்கள்.

அதோடு இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைய தொடங்கியிருந்தனர். அந்த நேரத்தில் தான் சீரியல் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இடியென ஒரு செய்தி வந்து இறங்கியது... ஆமாம் இந்த சீரியலில் குணசேகரனாக வாழ்ந்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் காலமானார்.

அவர் இறந்த பிறகு சீரியல் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆக மாறிவிட்டார்கள். ஆனாலும் மாரிமுத்து கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி சீரியல் தரப்பில் இருந்து முடிவு செய்தனர். மாரிமுத்து இறந்த அன்றே பல ரசிகர்கள் இந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வந்தனர். ஆனால் வேல ராமமர்த்தி நடிக்க தொடங்கிய பிறகு இவருக்கு இந்த கேரக்டர் செட்டாகவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது வேல ராமமூர்த்தியை மாரிமுத்துவாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியல் இயக்குனர் மாரிமுத்துவை மட்டுமே நம்பி இந்த சீரியலை கொண்டு போய்க் கொண்டிருந்தார். அதனால் அவர் இறந்த பிறகு சீரியல் சுவாரசியம் இல்லை என்று சிலர் கூறி வந்தது இயக்குனர் தரப்பிலும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சீரியலில் அப்பத்தாவாக நடிக்கும் பட்டமாவாக இருந்தாலும் சரி தாராவாக நடிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு வாரமும் ஒருவருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம்தான். ஆனால் ரசிகர்கள் தொடர்ச்சியாக நெகட்டிவ் ஆகவே கருத்து தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சேனல் தரப்பில் இருந்தும் கதையில் சில மாற்றத்தை செய்ய சொன்னதாகவும் ஆனால் இயக்குனர் அது முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் பல சீரியல்களை இயக்கி இருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதன்படியே இந்த சீரியலையும் கொண்டு போக வேண்டும் என்று இயக்குனர் முடிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் திடீரென்று சேனல் தரப்பில் இருந்து சீரியல் இயக்குனருக்கு ஒரு மெயில் வந்ததாகவும் உடனே அடுத்த நாள் சூட்டிங் வந்த நடிகர்களிடம் இயக்குனர் இந்த சீரியலை இதோடு முடித்து விடலாம் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீரென்று சீரியலை ஒரு வாரத்திற்குள் முடிப்பதற்கு காரணம் இரவு வந்த அந்த மெயில் தான் என்றும் சில நடிகர்கள் வருத்தப்படுகிறார்கள். அதோடு இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் திடீரென்று நாளையோடு சீரியல் முடிவடைய போகிறது என்று இயக்குனர் சொன்னதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் வேறு வழி இல்லை இதுவும் கடந்து போகும் என்று சில நடிகர்கள் வருத்தமாக சொல்கிறார்கள்.

அதோடு இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு புதியது புதியதாக அறிமுகமான சில நடிகர்களிடமும் சீரியல் முடிவு குறித்து இயக்குனர் பேசவில்லை என்றும் பிறகு சமூக வலைதளத்தில் வெளியான செய்திகளை பார்த்து தான் நாங்கள் அதிர்ச்சியோடு சக நடிகர்களிடம் பேசி தெரிந்து கொண்டோம் என்றும் வருத்தத்தில் பேசுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+