மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத சூப்பர் சிங்கர் பென்னி தயாள்.. காரணம் இதுதானாம்!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அன்புடன் நான் எனும் சுற்று ஒளிபரப்பாகி வர இருக்கிறது.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பென்னி தயாள்க்காக போட்டியாளர் ஒருவர் சிறப்பான பாடல் ஒன்றை பாடி டெடிகேட் செய்திருக்கிறார்.
தனக்காக முதல் முறை ஒருவர் இப்படி பாடி இருக்கிறார் என மேடையிலே பென்னி தயாள் கண் கலங்கி அழுதிருக்கிறார்.

மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசை ரசிகர்களின் பலருடைய மனதை கவர்ந்த நிகழ்ச்சி ஆக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களுடைய திறமையை நிரூபித்து தற்போது பின்னணி பாடகர்களாக மாறி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலர் தற்போது உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பெரியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பாடகரின் ஆரம்ப காலம்
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பாடகர் பென்னி தயாள் பங்கேற்று வருகிறார். பென்னி தயாள் 1984 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர் ஒரு பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் பாப் இசை பாடுவதில் வல்லவராகவும் இருக்கிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இதழியல் மற்றும் செய்தி தொடர்புகள் படித்து வந்த காலத்தில் எஸ்ஐ என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து இவர் பாடத் தொடங்கி இருக்கிறார்.

ஹிட் பாடல்கள்
அந்த நேரத்தில் தான் இவருடைய பாடல் திறமையை அறிந்த ஏ ஆர் ரகுமான் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். டாக்ஸி டாக்ஸி, ஓமன பெண்ணே போன்ற பல ஹிட்டான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் திரையுலகில் பெரும் பெயரை பெற்றது. அதோடு இவர் டான்ஸ் ஆடுவதிலும் விருப்பம் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எப்போதும் சிரித்த முகமாக போட்டியாளர்கள் பாடும் பாடல்களை ரசித்து கொண்டிருப்பார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அன்புடன் நான் என்ற ரவுண்ட் வந்துள்ளது.

அழுவதற்கான காரணம்
இந்த வகையில் இதில் நடுவர்களுக்கான போட்டியாளர்கள் ஒரு பாடல் பாடினார்கள். அந்த வரிசையில் பென்னி தயாள் தனக்காக ஒரு போட்டியாளர் பாடியதைக் கண்டு கண்கலங்கி மேடையிலே மிகவும் எமோஷனல் ஆகி அழுது இருக்கிறார். உடனே அங்கு இருக்கும் சக நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் பிரியங்கா உட்பட அனைவரும் அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி இருக்கின்றனர். எனக்கு இந்த மாதிரி வாழ்க்கையில் என்னை பற்றி பாடி நான் பார்த்ததில்லை. இதுதான் எனக்கு முதல் முறை என்று இவர் அந்த போட்டியாளருக்கு நன்றி கூறி இருக்கிறார். தற்போது இந்த பிரமோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications